Job Alert: அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
Job Alert: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் சமூகபாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் மல்லிப்புதூர், சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ஆற்றுப்படுத்துநர்
பணியிடம்
விருதுநகர்
கல்வித் தகுதி
தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்ற தபர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய கல்விச்சான்றுகளின் ஒளிநகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகதேர்வு,அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர்.
ஊதிய விவரம்
இக்குழந்தைகள் இல்லத்திற்கு 3 ஆற்றுப்படுத்துநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வுசெய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்கள், ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஒருநாளைக்கு ரூ.1000/- வீதம் 180 நாட்களுக்கு (இரு தினங்களுக்கு ஒரு முறை வீதம் ஆண்டு முழுவதும்) வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான www.virudhunagar.nic.in -லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றுகளின் ஒளிநகலுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 15.07.2023 அன்றுமாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்பப்படவேண்டும் மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
கண்காணிப்பாளர்,
சிறுவருக்கானஅரசினர் குழந்தைகள் இல்லம்,
மல்லிப்புதூர் - 626 141, திருவில்லிபுத்தூர் (வ), விருதுநகர் மாவட்டம்.
தொலைபேசி எண்.04563 281539
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.07.2023
*********
தமிழ்நாடு வனத்துறையில் கீழ் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் துணை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
தொழில்நுட்ப உதவியாளர்
Data Entry Operator
கல்வித் தகுதி:
- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. Forestry / Agriculture அல்லது எம்.எஸ்.சி., Wildlife Biology / Life Sciences / உயிரியியல் / விலங்கியல் / Natural Sciences அல்லது இந்தப் படிப்புகளுக்கு இணையான பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Data Entry operator பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை படிப்பு அல்லது கம்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- MIS / GIS பிரிவில் எம்.சி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆய்வு செய்வதில் இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு அரசு விதிகளின் படி, ஒப்பந்த பணிக்கான ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஒப்பந்தம் அடிப்படையிலான பணியிடங்களுக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை வனப்பாதுகாவலர் அலுவலகம்,
வன மரபியல் கோட்டம், எண்,2 பாரதி பார்க் ரோடு,
கோயம்புத்தூர் - 641 043
தொடர்பு எண் - 0422 - 2434791
விண்ணப்பிக்க கடைசி நாள் - 14.07.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1rYiPVJUGxm-MnRqz4avunqm9DR3G_58w/preview- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க.’