![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Kanchipuram job: பத்தாம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா? உங்களுக்குத்தான்! காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
![Kanchipuram job: பத்தாம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா? உங்களுக்குத்தான்! காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..! Free Private Sector Employment Camp at District Employment Office by Kanchipuram District Employment and Vocational Guidance Centre tnn Kanchipuram job: பத்தாம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா? உங்களுக்குத்தான்! காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/d29b9115e8f84bc32e98db2bd8432b81171729253766376_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில்
எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.06.2024 அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)