கிராம உதவியாளர் வேலைக்கு வரவேற்கப்படும் விண்ணப்பங்கள்.. 5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள ஏழு கிராம உதவியாளர் வேலைக்கு ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் வேலைக்கான விண்ணப்பம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள ஏழு கிராம உதவியாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் 5.11.2019 தேதிக்கு முன்பாக ஆண்டிபட்டி வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் , ஆண்டிபட்டி. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்களில் இனச்சுழற்சி முறை அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 5 .11. 2021 அன்று வரை மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் பதவியின் பெயர் கிராம உதவியாளர். பணியிடம் தேனி மாவட்டம், தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு பின்னர் அஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 7 , வயது வரம்பு 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும், விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.10.2021 , விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2021 , கல்வி தகுதி 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் , சம்பள விவரம் ரூ.11,100 – ரூ.35,100 , விண்ணப்பமுறை நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் , விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தேர்வு செய்யப்படும். தடையின்மைச் சான்று அரசுப் பணியாளர்கள் தங்களது துறையிலிருந்து தடையின்மைச் சான்று பெற்று சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்விற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பின்னர் தனியே நேரில் வழங்கப்படும். குறிப்பாக விணணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கும் தங்களது சொந்த செலவில் வர வேண்டும். தேர்வு மையங்களை மாற்றக் கோரும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கிராம உதவியாளர் பதவிக்கு நியமன இட ஒதுக்கீட்டு விதி வட்ட வாரியாகப் பின்பற்றப்படும்.
வட்டவாரியான காலிப்பணியிட பகிர்வு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பின்னர் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். தேர்வு நடைபெறுவதற்கு முன்பு வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டதாகும். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாவிடில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் அதே வகுப்பைச் சார்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கான நியமன இட ஒதுக்கடு விதி இத்தெரிவிற்குப் பொருந்தும். மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் 40 முதல் 50-க்குள் உடையவராக இருக்க வேண்டும். பார்வையற்ற மற்றும் காதுகேளாத நபர்கள் இத்தேர்விற்கு தகுதியற்றவர்களாவர்.
விண்ணப்பங்கள் கீழ்க்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும். 05.11.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ‘கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள்யாவும் 05.11.2021 தேதிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும். காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்