![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CUB Job Opportunity : சிட்டி யூனியன் வங்கியில் இந்த காலிப் பணியிடங்கள்.. உங்களுக்கு ஒரு அறிவிப்பு..
சிட்டி யூனியன் வங்கியில் Relationship Manager பதவிக்கு பல காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
![CUB Job Opportunity : சிட்டி யூனியன் வங்கியில் இந்த காலிப் பணியிடங்கள்.. உங்களுக்கு ஒரு அறிவிப்பு.. City union bank Relationship Manager recruitment 2022 apply online CUB Job Opportunity : சிட்டி யூனியன் வங்கியில் இந்த காலிப் பணியிடங்கள்.. உங்களுக்கு ஒரு அறிவிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/26/56003b925b0696b6c09040c2b39954a7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Relationship Manager பதவிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்
சிட்டி யூனியன் வங்கி:
சிட்டி யூனியன் வங்கி, 117 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றைக் கொண்டது. இவ்வங்கியானது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 727 கிளைகளின் நெட்வொர்க்கை கொண்ட ஒரு முன்னணி தனியார் துறை வங்கியாக உள்ளது.
விண்ணப்பம் குறித்து விபரங்கள்:
பணியின் பெயர்: Relationship Manager
சம்பளம் : திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி : அரசின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில், இப்பணிக்கு தொடர்புள்ள பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது : குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யப்படும் முறை: 1.தகுதியுடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும்
2.எழுத்து தேர்வு
3.நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில்,வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிப்பது எப்படி:
*முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் Careers (cityunionbank.com)
*CAREER என்ற பகுதியினை கிளிக் செய்யவும்
*Apply Now என்பதை கிளிக் செய்ய வேண்டும்
*03/06/2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்
பணி குறித்த தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கை கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவத்திற்கு செல்ல இந்த லிங்கை கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)