(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Post Recruitment: அஞ்சல் துறையில் வேலை! 27-ம் தேதி நேர்காணல் - எங்கே நடைபெறுகிறது?
Indian Post Recruitment: அஞ்சல் காப்பீட்டு முகவர் பணிக்கான நேர்காணல் சென்னை அலுவலகத்தில் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக (Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களுக்கான (Direct Agents)வேலைவாய்ப்பு அறிவிப்பினை சென்னை மத்திய கோட்டம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.
பணி விவரம்:
காப்பீட்டு முகவர்கள்
கல்வி தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பிரிவுகள்:
சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயன்படுத்த தெரிந்தவர்கள் சொந்த பகுதியில் வசிப்பவர்கள் அதை பற்றி நன்கு அறிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ளவர்கள் செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016 (ஆலந்தூர் மெட்ரோ அருகில்) உள்ள அலுவலகத்தில் 27.12.2023 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வருபவர்கள் மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்வி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இரண்டு உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (National Savings Certificate (NSC)/KisanVikasPatra (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.
இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வாடிக்கையாளர்களின் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல் தி பெஸ்ட்..
நேர்காணல் நடைபெறும் இடம்:
செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம்,
சென்னை 600016 (ஆலந்தூர் மெட்ரோ அருகில்)
நேர்காணல் நடைபெறும் நாள் - 27.12.2023
SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ] Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles ஆகிய பணியிடங்களுக்கான 26,146 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாள். கல்வித் தகுதி: இதற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் வாசிக்க..