CHENNAI JOB ALERT: தொகுப்பூதியத்தில் உடனே வேலை.! விண்ணப்பிப்பது எப்படி.? கடைசி தேதி என்ன.? சென்னை ஆட்சியர் அறிவிப்பு
CHENNAI JOB ALERT: குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதி மற்றும் கடைசி தேதி என்ன.?
தொகுப்பூதியத்தில் வேலைவாய்ப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் காலிப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது காலியாக உள்ள ஒரு புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காலிப்பணியிடத்தில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது சமமான வாரியத்திலிருந்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன.?
42 வயதுக்குமேற்பட்டவராக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு). பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான தொகுப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.10,592/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி.?
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்ப படிவத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பூர்த்தி செய்து 30.01.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை வடக்கு, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ். சென்னை 600 010 என்ற முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி என்ன.?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என தெரிவித்துள்ள சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகுதி வாய்ந்த நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.





















