Jobs: செங்கல்பட்டு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி?
Chengalpattu Jobs : தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாட பிரிவுகளில் 10 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 41 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் - ஆதிதிராவிடர் நல பள்ளிகள் - பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் .
செங்கல்பட்டு மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாத தொகுப்பூதியம் மாதம் ரூ.15,000/- மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.12,000/- வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர் நிலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பிரிவுகளில் 10 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 41 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப் பணியிடங்கள் பற்றிய விவரம் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இக்காலிப் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வி தகுதி:
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், TET Paper- II கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வி தகுதி:
இடைநிலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் TET Paper - I கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2025 வரையிலும் மட்டுமே தற்காலிக பணிநியமனம் செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தெரிந்து அந்தெந்த பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து பூர்வமான விண்ணப்பத்தினை உரிய கல்வி, தகுதி, சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு முகவரியிட்டு கீழ்கண்ட முகவரிக்கு 10.07.2024 அன்று மாலை 5.45 க்குள் ஒப்படைக்கலாம்.
முகவரி
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு.