மத்திய அரசு நிறுவனத்தில் 102 காலி பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க... விபரங்கள் உள்ளே!!!
பாதுகாப்பு பிரிவில் உள்ள தலைமை அதிகாரி பதவிக்கு மட்டும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 102 பணியிடங்களை நிரப்ப இருக்காங்க. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பலன் பெறலாம்.
மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி, நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 102 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் எரிப்பொருள் உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தகுதிகள் என்ன, விண்ணப்பிப்பது எப்படி என்ற விபரங்கள் முழுமையாக உங்களுக்காக!!!
மேற்பார்வை பொறியாளர் 3
தலைமை அதிகாரி 97
செயலாளர் 1
இந்தி அதிகாரி 1
மொத்தம் 102 காலிபணியிடங்களை நிரப்ப இருக்காங்க. அதற்கான அறிவிப்புதான் வெளியாகி உள்ளது.
வயது வரம்பு... யார் யாருக்கு எப்படி?
இப்பணியிடங்களுக்கு 26.09.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதவிகளுக்கு ஏற்ப உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு பொதுப்பிரிவினருக்கு அதிகபடியாக 32/34 ஆகவும், எஸ்சி பிரிவினருக்கு 37/39ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதர பதவிகளுக்கு அதிகபடியாக 27ஆகவும், ஒரு சில பதவிகளுக்கு 29 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உள்ளது.
எந்த பதவிக்கு என்ன கல்வித்தகுதி வேணும்?
மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு 65 சதவீத பொறியியல் பட்டப்படிப்புடன் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பெட்ரோலியம், தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தலைமை அதிகாரி பதவிக்கு வேதியியல் அறிவியல் பட்டப்படிப்பு, கெமிக்கல் பொறியியல், சிவில் பொறியியல், எலெக்ட்ரிக்கல் பொறியியல், பெட்ரோலியம் பொறியியல், ICAI/ICMAI, கணினி அறிவியல்/ ஐடி, மெக்கானிக்கல், தீ மற்றும் பாதுகாப்பு, சமூக சேவை, சுற்றுச்சூழல் அறிவியல், புவி இயற்பியல், புவியியல், சட்டம், எம்பிஏ மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.
செயலாளர் பதவிக்கு பட்டப்படிப்புடன் செயலகப் பயிற்சி/ நவீன அலுவலக மேலாண்மை/ செயலகப் பயிற்சி/ நிர்வாக உதவியாளர் ஆகியவற்றில் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு அனுபவம் தேவை. இந்தி அதிகாரி பதவிக்கு இந்தியில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எந்தெந்த பதவிக்கு எவ்வளவு சம்பளம்
மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு ரூ.80,000 முதல் அதிகபடியாக ரூ.2,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். தலைமை அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். செயலாளர் பதவிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சமபளம் வழங்கப்படும். இந்தி அதிகாரி பதவிக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் விதம்
இப்பணியிடங்களில் மேற்பார்வை பொறியாளர் மற்றும் தலைமை அதிகாரி பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். இதர பதவிகளுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும். பாதுகாப்பு பிரிவில் உள்ள தலைமை அதிகாரி பதவிக்கு மட்டும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தங்களின் விவரங்களின் ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கலாம். https://www.oil-india.com/advertisement-list என்ற இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் கிடையாது. இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் பெறப்பட தொடங்கிய நிலையில், செப்டம்பர் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடைபெறும்.





















