ரூ.78 ஆயிரம் சம்பளம்... மத்திய அரசு வேலை... சென்னையில் டியூட்டி.. நவ.5க்குள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு Screening & Aptitude test, Descriptive test and skill test போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காற்று எரிசக்தி நிறுவனத்தில் Junior executive, Director, Executive assistant என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் சென்னையில் பள்ளிக்கரணையில் தேசிய காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு Junior executive, Director, Executive assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆண் , பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
கல்வித்தகுதி :
Junior Executive assistant – இப்பணிக்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதோடு ஆங்கிலத்தில் தட்டச்சு பயின்றிருக்க வேண்டும்.
Additional director பணிக்கு Analogous படித்திருக்க வேண்டும்.
Executive assistant பணிக்கு ஏதாவதொரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 28 வயது முதல் அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில், https://niwe.res.in/careers.php என்ற இணைதயப்பக்கத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, முன்அனுபவம், கல்வித்தகுதி, போன்றவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட இணையதளப்பக்கத்தில் Junior executive, Director, Executive assistant பணிக்கு தனித்தனியாக விண்ணப்படிவங்கள் உள்ளது. எனவே எந்தப்பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைக்கிறீர்களோ? அதற்கு விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்துக்கொண்டு விண்ணப்பிக்கவும். இறுதியாக உங்களது விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
The Division Head (Finance & Administration)
Additional Charge National Institute of Wind Energy
Velachery – Tambaram Main Road,
Pallikaranai, Chennai – 600 100
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு Screening & Aptitude test, Descriptive test and skill test போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
Junior Executive assistant பணிக்கு ரூ. 25 ஆயிரம் எனவும், Additional Director ரூபாய் 78 ஆயிரத்து 800 மற்றும் Executive assistant பணிக்கு ரூபாய் 35 ஆயிரத்து 400 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.