CAPF: மத்திய ஆயுத காவல் படை பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு... விண்ணப்பிக்கும் முறை என்ன?
மத்திய ஆயுத காவல் படை பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 26 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) மருத்துவ அதிகாரி, சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவ அதிகாரி, சிறப்பு மருத்துவ அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதி வரம்புகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ / டிகிரி / டி.எம் / எம்.சி / பி.ஜி / எம்.பி.பி.எஸ் (தொடர்புடைய சிறப்பு) முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
மருத்துவ அதிகாரிக்கான அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
சிறப்பு மருத்துவ அதிகாரிக்கான அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவ அதிகாரிக்கான அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்
விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
காலி பணியிடங்கள்- 297
விண்ணப்பிப்பது எப்படி?
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
நிரந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும்.
நேர்காணலுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கவனிக்க:
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.04.2023
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை CAPF-ன் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்கவும்.