மேலும் அறிய

Bharathidasan University: நாளை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேர்காணல்; யாரெல்லாம் பங்கேற்கலாம்- முழு விவரம்!

Bharathidasan University: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை நேர்காணல் நடைபெற உள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரலாறு துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு நாளை (04.08.2023) நேர்காணல் நடைபெறுகிறது.  

பணி விவரம்:

கெளரவ விரிவுரையாளர்  (Guest Lecturer(Temporary and Hourly basis))

கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்:

இதற்கு விண்ணப்பிக்க வரலாறு துறையில் எம்.எஸ்.சி, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்வதில் பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NET/SLET/SET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Integrated மற்றும் முதுகலை வரலாறு துறை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும்.

பணி இடம்:

திருச்சிராப்பள்ளி

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை:

இதற்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.16,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ் நகல்களுடன், பட்டப்படிப்பின் சான்றிதழ் நகல் உள்ளிட்டவற்றுடன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி 

Department of History,

Bharathidasan University,

Tiruchirappalli-620024

நேர்காணல் நடைபெறும் நாள் - 04.08.2023 காலை 10.30 

https://drive.google.com/file/d/1ptKgz5MSw3kCzFhBg-qzHYvDX5KH2W49/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.bdu.ac.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

******

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY) உள்ள தமிழ் மற்றும் ஆங்கில துறையில் கெளரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

பணி விவரம்:

கெளரவ விரிவுரையாளர்

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் (இளங்கலை பட்டம் பெற்றவர் என்றால்) குறைந்தது 45% முதல் அதிகபட்சம் 80% வரை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
  • முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்றால் குறைந்தது 55% முதல் அதிகபட்சமாக 80% வரை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
  • எம்.பில். படித்தவர் என்றால் 55% - 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
  • முனைவர் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் NET/ SLET/SET (only Tamil Nadu) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்..
  • ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். ஆய்வு இதழ்களில் பிரசுரம் ஆகியிருக்க வேண்டும்.
  • இந்தப் பணி தற்காலிகமானது. அதவாது ஒரு கல்வியாண்டிற்கானது மட்டுமே. 

ஊக்கத்தொகை

இதற்கு மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை  “Application for the post of GUEST LECTURER in the Department of _____________________________” என குறிபிட்டு அஞ்சல் அனுப்ப வேண்டும். 

கவனிக்க..

  • ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். 
  • இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பொதுப்பணி துறையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • “The Registrar, Tamil Nadu Physical Education and Sports University” என்ற பெயரில் Demand Draft எடுக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.08.2023 மாலை 5 மணி வரை

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு.. https://tnpesu.org/upload/Notification-Application_for_the_Post_of_Guest_Lecturer%20_Temporary_%20for_English_and_Tamil-Academic_Year_2023-2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம் .

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY

Vandalur-Kelambakkam Road,

Melakottaiyur Post,

Chennai – 600 127. Tamil Nadu

தொடர்புக்கு

தொடர்பு எண் :044-27477906

இ-மெயில் முகவரி -regtnpesu@gmail.com

rec.sec.tnpesu@gmail.com


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget