மேலும் அறிய

Bank Recruitment 2023 :பிரபல வங்கியில் வேலை..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Bank of Maharashtra recruitment 2023 : பேங்க ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தினை இக்கட்டுரையில் காணலாம்.

நாட்டின் பிரபல பொத்துறை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank Of Maharashtra) நிர்வாகம் சார்ந்த அலுவலர்கள் ( officers in Scale II and III) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்: 

  • Officers in Scale II -100
  • Officers in Scale  III - 300

மொத்த பணியிடங்கள் - 400

பணியிடம்: 

இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் இதன் தலைமை அலுவலக அமைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தலைமை அலுவலகத்திலும் பணியமர்த்தப்படுவர். 

கல்வி மற்றும் பிற தகுதிகள் : 

  • Officers in Scale II பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA, CMA, CFA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • வங்கியில் மூன்றாண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். கிரெடிட் பிரிவில் பணியாற்றியிருந்தால் சிறப்பு.
  • Officers in Scale  III பணிக்கு விண்ணப்பிக்க இதே கல்வித் தகுதி இருக்க வேண்டும். மேலும் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். வங்கி மேலாளர் அளவில் பொறுப்பு எடுத்து பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும். 
  • இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு தெரிந்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 25 வயது முதல் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.  வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஊதிய விவரம்: 

  • Bank Recruitment 2023 :பிரபல வங்கியில் வேலை..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

இந்தப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆறு மாத காலம் 'Probation Period' இருக்க வேண்டும். 

Scale III  மற்றும் Scale II ஆகிய இரண்டு ஊதிய வரைவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. 


Bank Recruitment 2023 :பிரபல வங்கியில் வேலை..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

 

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்தப் பணிகளுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்  (Institute of Banking Personnel Selection) சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். 
ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். ஆன்லைன் தேர்வு தொடர்பாக விவரங்கள் சென்ரல் பேங்க ஆஃப் மகாராஷ்டிரா  வங்கியின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

தேர்வுப் பாடத் திட்டம்: 


Bank Recruitment 2023 :பிரபல வங்கியில் வேலை..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் : 


Bank Recruitment 2023 :பிரபல வங்கியில் வேலை..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இதற்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வினை எழுத முடியும். 

விண்ணப்பிக்கும் முறை: 
 
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  https://bankofmaharashtra.in/recruitment/mainpage.aspx -என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டணம் :

இதற்கு பொதுப்பிரிவினர் / ஓ.பி.சி. பிரிவினர் ஜி.எஸ்.டி. வரி ரூ.180 -யுடன் ரூ.1000 மொத்தம் ரூ.1180 ஆக செலுத்த வேண்டும்.

இதற்கு பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஜி.எஸ்.டி. வரி ரூ.18-யுடன் ரூ.100 மொத்தம் ரூ.180 ஆக செலுத்த வேண்டும்.

 பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், பொதுப்பணி துறையில் பணிபுரிபவர்,  ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.07.2023 

முக்கிய தேதிகள்:


Bank Recruitment 2023 :பிரபல வங்கியில் வேலை..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!


இது தொடர்பான அறிவிப்பின் முழு விவரம் அறிய https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/0069b591-be72-4327-9d6f-6ab1a597164b.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி - https://bankofmaharashtra.in/

இதற்கான நேர்காணல் நடைபெறும் விவரம் குறித்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். அப்டேட்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget