Agniveer Recruitment: தமிழ்நாட்டில் அக்னிபாத் சேர்க்கை முகாம்...எங்கெல்லாம் தெரியுமா...முழு விவரம் இதோ...
Agniveer Recruitment: இந்திய ராணுவத்தில் அக்னிவீரர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் திருச்சி, வேலூரில் நடைபெற உள்ளது.
Agniveer Recruitment: இந்திய ராணுவத்தில் அக்னிவீரர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் திருச்சி, வேலூரில் நடைபெற உள்ளது. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்
இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரியில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நவம்பர் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் கிளார்க் மற்றும் ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல், அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டிரேட்ஸ்மென் போன்ற பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாம் நடைபெறும் நாள்
திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரியில் நவம்பர் 13ஆம் தேதியும், வேலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நவம்பர் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாருர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
மேலும், ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் இந்த லிங்கை கிளிக் செய்யலாம் https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx
ஆவணங்கள் விவரம்
அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாமிற்கு https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx இந்த லிங்கில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும். முழுமையான ஆவணங்கள் மற்றும் தவறான ஆவணங்கள் எடுத்து வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பெரிய ஏரிகளின் நிலவரம் என்ன?
TN Rain News LIVE: மழை தொடர்பான புகார்: பொதுமக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு