மேலும் அறிய

இராமேஸ்வரம் கோவிலில் பல்வேறு பிரிவுகளில் 66 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க..

தமிழகத்தில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்று தான் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில். இங்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் தட்டச்சர், டிக்கெட் விற்பனையாளர், துப்புரவு பணியாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் 66 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழகத்தில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்று தான் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில். இங்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே கோவிலைப் பராமரிப்பதற்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது காலியாக உள்ள தட்டச்சர், காவலர், டிக்கெட் விற்பனையாளர் என 66 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை  குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

இராமேஸ்வரம் கோவிலில் பல்வேறு பிரிவுகளில் 66 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க..

இராமேஸ்வரம் கோவில் பணிக்கானத் தகுதிகள்:

தட்டச்சர்

காலிப்பணியிடங்கள் : 2

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூபாய் 18, 500 முதல் 58,600 என நிர்ணயம்.

டிக்கெட் விற்பனையாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 10

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.18,500

காவலர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 24

கல்வித்தகுதி: இராமேஸ்வரம் கோவிலில் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் – ரூ.15,900

தூர்வை பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 20

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் – மாதம் ரூ.10,000 – 31, 500 என நிர்ணயம்

துப்புரவு பணியாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 10

கல்வித்தகுதி :  விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் – மாதம் ரூ. 10 ஆயிரம் – 31, 500 என நிர்ணயம்.

வயது வரம்பு :

மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்க விரும்பினால், https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php  என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் இதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தவறில்லாமல் பூர்த்தி செய்து கோவில் முகவரிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,

இராமேஸ்வரம் – 623 526.

இராமநாதபுரம் மாவட்டம்

தேர்வு முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/1pinWkhQkyhW1pwIwsHJam7MnElno8jeL/view என்ற இணையதள பக்கத்தின் மூலம் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget