Zika Virus: கேரளாவை துரத்தும் வைரஸ்.. 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு.. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தல்..
கேரளா மாநிலத்தில் நீதிமன்ற ஊழியர்கள் 8 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், கடந்த 30 ஆம் தேதி ஒருவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது 55 பேரில் 24 பேரின் ரத்த மாதிரிக்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இவற்றி 8 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, வைரஸ் பரவாமல் தடுக்க அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜிகா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்கிறது மற்றும் கருவில் உள்ள மைக்ரோசெபாலி போன்ற பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத் துறையின் சிறப்புக் கண்காணிப்பில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்கள் வைரஸ் பரவுவதற்கு எதிராக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது," என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், நவம்பர் 2 ஆம் தேதி, கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஆகஸ்டு மாதம் சிக்கபல்லாபுராவில் உள்ள ஆறு நீர்நிலைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தியாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. 2021 ஆம் ஆண்டில், கேரளாவைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டில், மகாராஷ்டிராவின் பெல்சார் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டில், தலசரியில் உள்ள ஒரு அரசு குடியிருப்புப் பள்ளியில் படித்த 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், இந்த நோயின் தாக்கம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ், டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதற்கு காரணமான ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது.
ஜிகா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை. ஆனால் ஒரு சிலருக்கு காய்ச்சல், அழற்சி, மூட்டு வலி மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் (சிவப்பு கண்கள்) ஆகியவை தென்படலாம். பல பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உணராமல் இருக்கலாம், ஏனெனில் அறிகுறிகள் மற்ற பொதுவான நோய்களுக்கு ஏற்படுவது போலவே இருக்கும். இருப்பினும், பிறந்த குழந்தைகளில், குறிப்பாக மைக்ரோசெபாலி என்ற (சிறிய தலை) பிறப்பு குறைபாடுக்கு வைரஸின் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
Kamal Haasan Wishes Seeman: தனக்கென்று ஒரு அரசியல்.. சீமான் பிறந்தநாளில் கமல்ஹாசன் வாழ்த்து!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )