முள் பாதுகாப்பு.. உள்ளே இனிப்பு.. அன்னாசி பழம் கொழுப்பை கரைக்கும்.. எப்படி தெரியுமா?
அன்னாசிப் பழம் சுவை நிறைந்த பழங்களுள் ஒன்று. சுவையான உணவாக இருப்பது மட்டுமின்றி, அன்னாசிப் பழத்தில் அதிகளவிலான ஆரோக்கியம் தரும் பொருள்கள் நிரம்பியுள்ளன
அன்னாசிப் பழம் சுவை நிறைந்த பழங்களுள் ஒன்று. அதனை ஜூஸ், மில்க்ஷேக், ஐஸ் க்ரீம், கேக் எனப் பல்வேறு உணவு வகைகளாக உட்கொள்ள முடியும்.
சுவையான உணவாக இருப்பது மட்டுமின்றி, அன்னாசிப் பழத்தில் அதிகளவிலான ஆரோக்கியம் தரும் பொருள்கள் நிரம்பியுள்ளன. இதுகுறித்து சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உடல் ஆரோக்கிய நிபுணர் டீயன் பாண்டே. `அன்னாசிப் பழம் போல கம்பீரமாக, வெளிப்புறத்தில் முள் போன்ற பாதுகாப்புக் கவசத்துடன், உள்ளே இனிப்பாக இருங்கள்!’ என அவர் பதிவிட்டுள்ளார்.
`அன்னாசிப் பழத்தில் கால்சியம், மேங்கனீஸ், வைட்டமின் சி ஆகியவை உள்ளன’ எனக் கூறியுள்ளார் டீயன் பாண்டே. தொடர்ந்து அவர் அன்னாசிப் பழச்சாறு குடிப்பது கொழுப்பு சேராமல் தடுப்பதோடு, உடலில் உள்ள கொழுப்பு கரைவதற்கும் பயன்படுகிறது. சமீபத்தில் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணரான கினிடா கடாக்கியா படேல் அன்னாசிப் பழத்தில் உள்ள ப்ரோமெலெயின் என்ற வேதிப்பொருள் செரிமானத்திற்கு உதவும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
உடல் எடைக் கூடிவிடும் என்ற அச்சம் இருந்தும், இனிப்பாக ஏதேனும் உண்ண வேண்டும் எனத் தோன்றினால் அன்னாசிப் பழம் உண்ணப் பரிந்துரைக்கிறார் டீயன் பாண்டே. `அன்னாசிப் பழத்தில் இனிப்புகளை விட குறைவான கலோரிகள் இருக்கின்றன. ஐஸ் க்ரீம், அன்னாசிப் பழம் என இரண்டும் இருந்தால், அன்னாசிப் பழத்தைத் தேர்ந்தெடுத்து, இனிப்பையும் அனுபவித்து எடையையும் குறைக்கலாம்’ என்கிறார் டீயன் பாண்டே.
மேலும், அன்னாசிப் பழத்தில் பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. பல்வேறு வைட்டமின்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்று கூறியுள்ளார் டீயன் பாண்டே.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )