மேலும் அறிய

Tn Corona Update: மயிலாடுதுறை: தொடர்ந்து இறங்கு முகத்தில் கொரோனா!

ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவ தொடங்கியது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பித்தது நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்தாலும்,  ஒரு சில மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை.

Tn Corona Update: மயிலாடுதுறை: தொடர்ந்து இறங்கு முகத்தில் கொரோனா!

இன்று முதல் தொற்று பரவல் நிலையை பொறுத்து 3 வகைகளாக மாவட்டங்களை பிரிந்து, தொற்று  குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் நாளை முதல் மேலும்  தளர்வுகளை அதிகப்படுத்தியும், தொற்று அதிகமான மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழ்நாடு அரசு நீட்டிப்பு செய்துள்ளது. தொற்று அதிகரித்து காணப்படும் முதல் வகை 11 மாவட்டங்களின் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமும் இடம்பெற்றுள்ளது.

Tn Corona Update: மயிலாடுதுறை: தொடர்ந்து இறங்கு முகத்தில் கொரோனா!

குறிப்பாக ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. அது சற்று குறையத் தொடங்கி இன்றுடன் ஒரு வார காலமாக படிப்படியாக  குறைந்து இன்று 120 ஆக பதிவாகியுள்ளது. இது மாவட்ட மக்களிடையை நம்பிக்கையை ஏற்படுத்தி தளர்வுகளை எதிர்பார்த்த நிலையில் அரசு தொடர்ந்து தொற்று பரவும் மாவட்டங்களில் மயிலாடுதுறையும் வைத்துள்ளது . இதுவரை மாவட்டத்தில் 37 ஆயிரத்து 214 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 35 ஆயிரத்து 484 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 120 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 324 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 487 ஆக உயர்ந்துள்ளது. 

Tn Corona Update: மயிலாடுதுறை: தொடர்ந்து இறங்கு முகத்தில் கொரோனா!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1 ஆயிரத்து 243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tn Corona Update: மயிலாடுதுறை: தொடர்ந்து இறங்கு முகத்தில் கொரோனா!

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும்.  நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது என  மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget