TamilNadu Covid-19 Daily Data Tracker: தமிழ்நாட்டில் இன்று 1568 பேருக்குக் கொரோனா: 19 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 1563 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்த ஐந்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 568 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1562 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 1568 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 1563 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்த ஐந்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆக மொத்தம் 1568 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 03 Sep
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) September 3, 2021
Today/Total - 1,568 / 26,19,511
Active Cases - 16,370
Discharged Today/Total - 1,657 / 25,68,161
Death Today/Total - 19 / 34,980
Samples Tested Today/Total - 1,60,742 / 4,27,93,906**
Test Positivity Rate (TPR) - 0.97%#TNCoronaUpdate #TN pic.twitter.com/IJM1hnPZqq
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 19 ஆயிரத்து 511 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 44 ஆயிரத்து 648 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 166 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே166 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றும் 166 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி கோயம்பத்தூரில் 215 பேரும், சென்னையில் 166 பேரும், ஈரோட்டில் 132 பேரும், தஞ்சாவூரில் 110 பேரும், செங்கல்பட்டில் 103 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,980 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 90 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒருவர் உயிரிழிந்துள்ளார். சென்னையில் மட்டும் மொத்தம் 8405 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக திருவள்ளூரில் நான்கு பேரும் மற்றும் கோவையில் மூன்று பேரும் உயிரிழிந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,370 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,657 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,68,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இன்று மாநிலம் முழுவதும் 43756 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24768 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8674 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையால், தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கூடுதல் தடைகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )