மேலும் அறிய

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

நாளொன்றுக்கு100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

கரூரில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நிலவரத்தை தற்போது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை, 217 ஆகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 04ஆக உள்ளது. கரூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுடன் இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவித்து அதன் நடைமுறையில் உள்ளது இந்நிலையில் வருகின்ற வாரத்தில் மூன்றாம் கட்ட தொடர்புகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் அறிவிக்கப்பட்டிருந்த  கொரோனா தொற்று பாதித்த விவரத்தில்126 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 217 நபர்கள் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 04 நபர்கள் கொரோனா தொற்றுபாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன.

தமிழக சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மொத்த விவரம் தற்போது காணலாம். தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21165 ஆகும். அதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவள் எண்ணிக்கை 19979 ஆகவும், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் விவரம் 856 ஆகவும்,  இதுவரை கரூர் மாவட்டத்தில் 330 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தற்போது அறிவிப்பை வெளியிட்டது. 

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

கரூர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம், 20 மேற்பட்ட பஞ்சாயத்து கிராம பொது மக்களிடையே காய்ச்சல் முகாமும் நடைபெற்று வருகிறது.  இந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் நேரில் சென்று தங்களது உடல் பரிசோதனையை செய்துகொண்டு அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2000 தடுப்பூசிகள் வீதம்  பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் மூலம் போடப்பட்டு வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் காத்துக்கொண்டு இருக்கும் நிலையும் வந்துள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பூசி முகாம் இன்னும் கூடுதலாக சிறப்பு மையத்தை ஏற்படுத்தி அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

இதேபோல் கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக நாள்தோறும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது நாளொன்றுக்கு100-க்கும் மேற்பட்ட நபர்கள் முகக்கவசம் அணியாமலும், தமிழக அரசின் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பயணம் மேற்கொண்டு வருவதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து நாள்தோறும் செய்து குறிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget