ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை..விழிப்புணர்வு போதும் - மருத்துவர் வி.கே பால் தகவல்
தமிழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் சிறப்பான முறையில் ஒமிக்ரான் குறித்த அடிப்படை புரிதல்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் ஏற்படும் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஒமிக்ரான் பாதிப்பின் தன்மையைக்குறைப்பதற்கு தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலாஜிஸ்டுகளைச் சேர்க்கவேண்டும் என மத்திய அரசின் நிரஞ் ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. ஒருபுறம் பட்னி, மற்றொருபுறம் வேலை இழப்பு என சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சனைகளைச் சந்தித்து வந்த நிலையில் தொற்றின் வேகம் சற்றுத் தணிந்தது. ஆனால் மீண்டும் டெல்டா வகை தாக்கப்பட்டபோது லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
தற்போது மீண்டும் மற்றொரு பாதிப்பான ஒமிக்ரான் ஒருபுறம் அதிகரித்துவருகிறது. ஆனால் இதுக்குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். மருத்துவர்களின் கருத்தின்படி, டெல்டா வகையான வைரசிற்கும், ஒமிக்ரான் வைரசிற்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக டெல்டா வைரஸ் பரவும் வேகத்தைக்காட்டிலும் 40 மடங்கு அதிவேகமாகப் பரவக்கூடியது தான் ஒமிக்ரான். ஆனால் டெல்டா வைரசின் வீரியத்தில் பத்தில் ஒரு பங்கு வீரியத்தை மட்டுமே ஒமிக்ரான் கொண்டுள்ளதால் மக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துவருகிறது.
உதாரணமாக ஐரோப்பாவில் , டெல்டா வகை வைரஸ் பாதிப்பின்போது, 65 ஆயிரம் நோயாளிகளில் 1000 பேர் இறந்தனர். ஆனால் ஓமிக்ரான் பாதிப்பில் 95 ஆயிரம் நோயாளிகளில் 100 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதோடு கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு 95 சதவீதம் இருக்க வாய்ப்பில்லை எனவும், வெறும் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே மிக லேசானப் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்தான் மத்திய அரசின் நிரஞ் ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் கூறுகையில், இந்தியாவில் 2022 பிப்ரவரி மாத இறுதியில் 3-வது அலை உருவாகக்கூடும் என்று கணித்துள்ளார். ஆனால் 2-வது அலையில் இருந்த உயிரிழப்புகள் அளவிற்கு இந்த முறை இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். எனவே ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துவருகிறார். குறிப்பாக இந்தியாவில் மகராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்புக்குறித்த வல்லுநர் குழுக்களில் பெரும்பாலும் மருத்துவர்களையேச் சேர்த்துள்ளனர். ஆனால் இந்த வகையான வல்லுநர் குழுக்களில் நுண்ணுயிரியல் குறித்த விரிவான , தெளிவான பட்டப்புரிதல் உள்ள நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள்தான் இருக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பு வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலாஜிஸ்டுகளை இடம் பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுப்பதாக நிரஞ் ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் சிறப்பான முறையில் ஒமைக்ரான் குறித்த அடிப்படை புரிதல்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் ஏற்படும் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.