கரூர் : கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியோர் சதவிகிதம் உயர்வு..!
கரூரில் இன்று கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பின்னர் ஒரே நாளில் 395 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் செல்போன் மற்றும் தொலைக்காட்சி சம்பந்தமாக கடைகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. அதே போல் சலூன் நிலையம் மற்றும் அழகு நிலையம் அனுமதி வழங்கிய நிலையில் நாளை மறுதினம் ஜூன் 14 ஆம் தேதி முதல் காலை10 மணி முதல் 2 மணி வரை ஒயின் ஷாப் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சில தளர்வுகளை மட்டுமே நீக்கி மீண்டும் ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு இன்று தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக சுகாதாரத் துறையின் சார்பாக நாள்தோறும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் எண்ணிக்கையும், அதை தொடர்ந்து நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் எண்ணிக்கையும் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் சார்பாக குறித்து வெளியான தகவலில் இன்று ஒரே நாளில் 158 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதே போல் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் எண்ணிக்கை நேற்றை விட அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று ஒரே நாளில் 395 நபர்கள் நோய் தொற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களில் சிகிச்சை பலனின்றி ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆகவே மாவட்ட மக்கள் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளபடி சில கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவின்போது வீட்டை விட்டு வெளியே வரும்போது வருஷம் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், அதே போல் சமூக இடைவெளியை உள்ளிட்ட அரசு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் நாள்தோறும் செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் விதமாக நாள்தோறும் மாவட்டம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், கரூர் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்க்கப்பட்டு அதன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி பற்றாக்குறையால் மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் விரைவாக தங்கு தடையின்றி தடுப்பூசி முகாமை தொடர்ந்து நடத்திட வழிவகை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று கொரோனா தடுப்பூசி குறித்து கரூர் மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குனர் செய்திக்குறிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் கரூர் மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் என தகவல் தெரிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அல்லது நாளையோ திருச்சி மண்டலத்தில் இருந்து கரூருக்கு தடுப்பூசி கிடைக்கும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் மாவட்டத்தில் ஒன்றாக உள்ளது. ஆகவே, மாவட்ட மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )