மேலும் அறிய

Covid-19: லேசான கொரோனா பாதிப்பு கூட ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் - ஐஐடி ஆய்வு

கொரோனா பாதிப்பு மற்றும் ஆண்களின் குழந்தை பேறு தொடர்பாக மும்பை ஐஐடி ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கொரோனா பாதிப்பு  காரணமாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா என்பது தொடர்பாக மும்பை ஐஐடி ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்விற்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத 10 ஆண்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்ட 17 பேர் ஆகியோர் உட்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரின் விந்தணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவுகளின் மூலம் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் பாதிக்காதவர்கள் விந்தணுக்கள் ஒப்பிடப்பட்டன. 

அதன்படி கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இயல்பாக இருப்பவர்களைவிட சில முக்கிய மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. மேலும் அவர்களின் விந்தணுவின் தரம் மற்றும் செயல்பாடு சற்று குறைந்து காணப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பு உள்ளாகியிருந்தவர்களின் விந்தணுக்களில் இன பெருக்கத்திற்கு தேவையான புரோத அளவு பாதியாக குறைந்திருந்தும் தெரியவந்துள்ளது. 


Covid-19: லேசான கொரோனா பாதிப்பு கூட ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் - ஐஐடி ஆய்வு

அத்துடன் லேசான கொரோனா தொற்று பாதிப்பு கூட ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  எனினும் இந்த ஆய்வை உறுதி செய்ய மேலும் அதிக ஆண்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கொரோனா தொற்று ஆண்களுக்கான குழந்தை பேறு விஷயங்களில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாக தெரிகிறது என்று கூறப்படுகிறது. 

மேலும் கொரோனா வைரஸ் போல் இதர வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் சார்ஸ் வைரஸ் தொடர்பான பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கும் இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே கொரோனா பாதிப்பு மற்றும் ஆண்களின் மலட்டுத்தன்மை தொடர்பாக பல ஆய்வுகள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் தற்போது ஐஐடி நிறுவனத்தின் இந்தப் புதிய ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget