100 Crore Vaccinations: நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்தது!
இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை, 100 கோடியைக் (1,00,06,07,726) கடந்தது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20,66,773 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை, 100 கோடியைக் (1,00,06,07,726
) கடந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 10.78 (10,78,72,110) கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
Congratulations India! We are 100 Crores strong against #COVID19 ! #VaccineCentury #COVIDGroundZero #TyoharonKeRangCABKeSang @PMOIndia @mansukhmandviya @ianuragthakur @DrBharatippawar @PIB_India @mygovindia @COVIDNewsByMIB @ICMRDELHI @DDNewslive @airnewsalerts pic.twitter.com/YvmnMGafIO
— Ministry of Health (@MoHFW_INDIA) October 21, 2021
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 10.78 (10,78,72,110) கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
ஜனவரி மாதம் ஒப்புதல் கிடைத்தது:
இன்று, 100 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி என்ற இலக்கை எட்டியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனை சென்று அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினர். இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது.
🔊 @mygovindia's 'Vaccination Century' track binds the nation in a gesture of solidarity, to express gratitude to all corona warriors, who embarked on the mission of #AatmanirbharBharat to ensure 100% vaccination coverage for all #VaccineCentury pic.twitter.com/nDbpOIQRsU
— DD News (@DDNewslive) October 21, 2021
அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்டது ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி. பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது.
கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோன தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை உருவாக்க, ஒவ்வொரு தனி நபரும் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், குடிமக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தயக்கம் நிலவிவந்த காரணத்தினால் நேரடியாக செல்லும் முறை (வாக்-இன்ஸ்) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மேலும், அடையாள அட்டைகள் இல்லாத நாடோடிகள், கைதிகள், மனநல மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவோர், முதியோர் இல்லங்களில் இருப்போர், பிச்சைக்காரர்கள், மறுவாழ்வு மையங்களில் இருப்போர் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான முயற்சியையும் மத்திய அரசு துரிதப்படுத்தியது.
🔊 @mygovindia's 'Vaccination Century' track binds the nation in a gesture of solidarity, to express gratitude to all corona warriors, who embarked on the mission of #AatmanirbharBharat to ensure 100% vaccination coverage for all #VaccineCentury pic.twitter.com/nDbpOIQRsU
— DD News (@DDNewslive) October 21, 2021
இதுதொடர்பாக, கடந்த மே 6ம் தேதியிட்ட சுற்றரிகையைல், வீடு இல்லாத ஆதரவற்ற மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கான நிலையான இயக்க நடைமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்கீழ், தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல, தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு இருப்பிடச் சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல, கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்து மத்திய அரசு அனுமதியளித்தது. கொரோனா இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு, முதல் அலையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்த காரணத்தினாலும், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட்டால், அது தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பாக அமையும் என்றும் கூறப்பட்டது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )