மேலும் அறிய

திருவண்ணாமலை இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இன்று 2 நபர்கள் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழப்பு இல்லை

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது.அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதித்தோரின் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்திருந்தது.

திருவண்ணாமலை  இன்று புதிதாக  2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 

 

இதுவரை மாவட்டத்தில் 66 ஆயிரத்து 797 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 66 ஆயிரத்து 093 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று கொரோனா தொற்று 2நபர்களுக்கு பாதிப்பு இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 685-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கலூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாகக்‌ அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌. 

 


திருவண்ணாமலை  இன்று புதிதாக  2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்றைய கொரோனா தடுப்பூசி நிலவரம்

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தோற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என, மத்திய அரசு அறிவித்த நிலையில், நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முகாமினை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்களுக்குப் பின்பு இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டது. தொடங்கப்பட்ட கொரோனா பூஸ்டர் தடுப்பு ஊசியை அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் இன்று நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் மாவட்ட முழுவதும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசியை நபர்கள் செலுத்திக்கொண்டனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் அனைத்து மையங்களிலும் பூஸ்டர் தடுப்பு ஊசிக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த நிறுவனம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Embed widget