மேலும் அறிய

மயிலாடுதுறை: புதிதாக  11 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொற்றின் எண்ணிக்கை 26,394 ஆக உயர்வு.

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு  நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுப்பிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது, கொரோனா, டெல்டா கொரோனா, ஓமிக்ரோன் அதனை தொடர்ந்து தற்போது NeocoV  என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி அதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிகள் என தடுப்பூசிகளும் அறிமுகம் ஆகும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது உலக வல்லரசு நாடுகளுக்கே பெரும் சவாலாக இருந்தது வருகிறது.

மயிலாடுதுறை: புதிதாக  11 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..

இந்த சூழலில் தமிழ்நாட்டின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 வது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 26 ஆயிரத்து 394 பேர் பாதிப்புக்குள்ளாகி, அதில் 25 ஆயிரத்து 583 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் மாவட்டத்தில் புதிதாக 11 நபர்களுக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டு 98  நபர்கள் குணமாகி வீடு சென்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையம், வீடுகளில் தனிப்படுத்தி கொண்டு சிகிச்சை என 487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை மாவட்டத்தில் 324 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மயிலாடுதுறை: புதிதாக  11 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் நாடுமுழுவதும் பல இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி செயல்பாட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை  18 லட்சத்து  26 ஆயிரத்து  194  நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

முதல் தவணை தடுப்பூசியும் 10 லட்சம் 45 ஆயிரத்து 526 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 76 ஆயிரத்து 316 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 4 ஆயிரத்து  352  பேருக்கு செலுத்தியுள்ளனர்.  இதில் ஆண்கள் 8 லட்சத்து 49 ஆயிரத்து 211 பேரும், பெண்கள் 9 லட்சத்து 72 ஆயிரத்து 306 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 325 தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  இதில் கோவாக்சின் 2 லட்சத்து  8 ஆயிரத்து 800 பேருக்கும், கோவிஷீல்ட் 16  லட்சத்து 17 ஆயிரத்து 394 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டும் ஓமிக்ரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget