கரூர் : 1000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன - மாவட்ட ஆட்சியர் தகவல்..!
இன்றைக்கு கரூர் மாவட்டத்தில் 1,17,676 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வட நேரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
கரூர் மாவட்டத்தில் இதுவரை 20,149 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 17,332 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 2,513 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் 595 நபர்களும், தனியார் மருத்துவமனைகளில் 359 நபர்களும், கொரோனா பராமரிப்பு மையத்தில் 98 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,461 நபர்கள் மருத்துவ உதவிகளுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சை முடித்து நாளுக்கு நாள் அதிகப்படியான வீடு திரும்பி உள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வட நேரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை 01.04.2021 முதல் இன்றைய தேதி வரை 1,19,544 மாதிரிகளுக்கு செய்யப்பட்டுள்ளன. கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான அளவில் ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது விதிமீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் மீது நாளது தேதி வரை ரூபாய் 78,65,100 -அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேதி வரை கரூர் மாவட்டத்தில் 1,17,676 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்பொழுது 1000 டோஸ் மருந்து இருப்பில் உள்ளது. பொதுமக்கள் அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கை முழுவதுமாக கடைபிடித்து, அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் செல்வதை தவிர்த்து, அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து ஐந்து நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு இருந்துவந்த நிலையில் இன்று முதல் கரு உரி 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நோய் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் கிராம பொது மக்களுக்கு மருத்துவ காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும், முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வட நேரே தெரிவிக்கிறார். மேலும் கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎல் சார்பாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து , கரூர் நகர மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், கரூர் காந்திகிராமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் வசதி கூடிய படுக்கை வசதியும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு தொற்று பாதித்தவர்களுக்கு, ஆக்சிஜன் வழங்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரூரில் காவல்துறையும் நாள்தோறும் முக கவசம் அணியாமல் நடமாடும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தது 100-க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நாள்தோறும் வழக்கு பதிவு செய்து அதை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆகவே, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென கரூர் மாவட்ட காவல்துறையின் வேண்டுகோள் அளித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில நபர்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மதிக்காமல் வெளியே வருவதால் நோய்த்தொற்று வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )