Corona LIVE Updates: அதிகபட்சமாக மதுரை, கோவையில் தலா 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
கொரோனாவால் மேலும் 4512 பேர் பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 512 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,423 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,512 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 272 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 275 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 275 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 118 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 71 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 47 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8165 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை கோவையில் தலா 12 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் 9, சென்னை, ராணிப்பேட்டையில் தலா 7 பேர் உயிரிழந்தனர்.
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு டெஸ்டிங் வேண்டாம் என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரளாவில் குறையாத கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும், கொரோனா அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
மாடர்னா தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி?
மாடர்னா தடுப்பூசி இறக்குமதிக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாடர்னா தடுப்பூசி இறக்குமதிக்கு சிப்லா நிறுவனம் அனுமதி கோரிய நிலையில் ஒப்புதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அனுமதி மூலம் இந்தியாவில் 4ஆவது கோவிட் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் மூன்றாம் அலையை தடுப்பதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
கொரோனா மூன்றாம் அலையைச் சமாளிக்க பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.100 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

