மேலும் அறிய

Ayush on Covid-19: லேசானது முதல் மிதமான பாதிப்பில் பலன்: கண்டறியப்பட்டுள்ளது, கபசுர குடிநீரின் செயல்திறன்..!

அஷ்வகந்தா, யாஷ்டிமது, குடுச்சி + பிப்பலி மற்றும் ஒரு மூலிகை மருந்து (ஆயுஷ்-64) ஆகிய நான்கு முறைகளை இக்குழு ஆய்வு செய்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக ஆயுஷ் மருத்துவ முறையைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி, கபசுர குடிநீரின் செயல்திறன் கண்டறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொரோனா அறிகுறிகள் உள்ள நோயாளிகளின் சிறப்பான மேலாண்மைக்கான செயல்திறன் மிக்க மருந்துகளை அடையாளம் காண்பதற்காக நாடு முழுவதும் உள்ள 152 மையங்களில் 126 ஆய்வுகள் பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் தொடங்கப்பட்டன.

அமைப்பு ரீதியான ஆய்வுகளை பொருத்தவரை, 66 ஆராய்ச்சிகள் ஆயுர்வேதத்தில் இருந்தும், 26 ஹோமியோபதியில் இருந்தும், 13 சித்தாவில் இருந்தும், 8 யுனானியில் இருந்தும், 13 யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டன.

90 ஆய்வுகள் நிறைவடைந்து, 10 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு, எய்ம்ஸ் மற்றும் ஆயுஷ் அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகளைக் கொண்ட ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பல்துறை பணிக்குழுவை ஆயுஷ் அமைச்சகம் அமைத்துள்ளது.

விரிவான ஆய்வு மற்றும் நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கான மருத்துவ செயல்முறைகளை ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்குழு உருவாக்கியுள்ளது.

அஷ்வகந்தா, யாஷ்டிமது, குடுச்சி + பிப்பலி மற்றும் ஒரு மூலிகை மருந்து (ஆயுஷ்-64) ஆகிய நான்கு முறைகளை இக்குழு ஆய்வு செய்துள்ளது.

பல்வேறு நிபுணர் குழுக்களுடனான ஆலோசனைக்குப் பிறகு தேசிய பணிக்குழு உருவாக்கிய “கொரோனா மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையிலான தேசிய மருத்துவ மேலாண்மைக்கான செயல்முறையை” இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆயுஷ்-64 மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை கொரோனா சிகிச்சைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.  சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் லேசானது முதல் மிதமான கொரோனா பாதிப்புகளின் சிகிச்சையில் பலனளிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Ayush on Covid-19: லேசானது முதல் மிதமான பாதிப்பில் பலன்: கண்டறியப்பட்டுள்ளது, கபசுர குடிநீரின் செயல்திறன்..!

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி குழுக்கள் மற்றும் தேசிய நிறுவனங்கள் மூலம் ஆயுஷ்--64 மற்றும் கபசுர குடிநீரை நாடு முழுவதும் விநியோகிப்பதற்கான நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Baleno & Fronx Facelift: சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Embed widget