’புற்றுநோய் ஆபரேஷனுக்கு முன்பு சில்லிங்!’ : நடிகையின் வைரல் வீடியோ
சமீபத்தில் தான் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை வெளிப்படுத்திய நடிகர் சாவி மிட்டல், எவ்வாறு நேர்மறையான கண்ணோட்டத்தைப் பேணுகிறார்... என்பதையும் பேசியிருந்தார்.
நாகின் விராசாட் உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் சாவி மிட்டல். சமீபத்தில் தான் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை வெளிப்படுத்திய நடிகர் சாவி மிட்டல், எவ்வாறு நேர்மறையான கண்ணோட்டத்தைப் பேணுகிறார் என்பதையும் பேசியிருந்தார். அவர் நோயுடன் போராடும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் தனது மருத்துவமனை அறையில் தான் நடனமாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
ஞாயிற்றுக்கிழமை சாவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாப் டாடி என்கிற பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பதிவில் அவர், மருத்துவர் தன்னை ஓய்வெடுக்குமாறு கூறியதை அடுத்து, மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக நடனமாட முடிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "மருத்துவர், சாவி நீங்கள் கூலாக இருக்க வேண்டும் என்றார்! அதனால் நான் என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாவி நடனமாடுவதை அவர் பின்னணியில் இருந்து அவரது கணவர் மோஹித் ஹுசைன் நையாண்டி செய்யவும் அவரது பக்கம் கேமிராவைத் திருப்புகிறார். பின்னர் அவரும் நடனமாடுவது போல வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவுக்கு ரசிகர்களும் நண்பர்களும் பாராட்டு தெரிவித்து அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )