Love At First Sight: கண்டதும் காதல், பார்த்ததும் இதயங்கள் பற்றிக்கொள்வது எப்படி? அறிவியலா? அதிசயமா?
Love At First Sight: மனிதர்களிடையே கண்டதும் காதல் ஏற்படுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Love At First Sight: மனிதர்களிடையே கண்டதும் காதல் ஏற்படுவது அறிவியலா? அதிசயமா? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
முதல் பார்வையிலேயே காதல்..
”உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே.. என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே.. எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்..” உங்களுக்குத் தெரியாவிட்டாலும், அறிவியலுக்கு நிச்சயமாகத் தெரியும். இது எப்படி நடந்தது? அது ஏன் நடந்தது, இப்போது என்ன நடக்கும்? என பல கேள்விகளை எழுப்பும் கண்ட உடனே மலரும் காதல் தொடர்பாக தான் நாம் இங்கு விவாதிக்க உள்ளோம். காதல் பற்றிய பல பாடல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பெரும்பாலான பாடல்களில் முதல் பார்வையில் காதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதல் பார்வையிலேயே காதல் எப்படி மலர்கிறது தெரியுமா? ஏன் இப்படி நடக்கிறது? குறிப்பிட்ட ஒருவரைப் பார்க்கும்போது இதயம் ஏன் அதிவேகமாக துடிக்க தொடங்குகிறது? உண்மையில், இது உடலில் ஒரு சிறிய ரசாயன எதிர்வினையைத் தவிர வேறில்லை, என்பதை நீங்கள் அறிவீர்களா?
இதயம் ஏன் கூசுகிறது?
ஒரு சாதாரண மனிதனுக்கு வயிற்றில் மட்டும் கூச்சம் வரும், ஆனால் காதலில் விழுந்தவர் இந்த கூச்சத்தை உடலில் எங்கு வேண்டுமானாலும் உணரலாம். உண்மையில், காதல் அப்படிப்பட்ட ஒன்று. அது நம்மில் தோன்றியதும், உடலின் அனைத்து பாகங்களும் ஒன்றாக விளையாடத் தொடங்கி, சரிகமப பாடத் தொடங்கும். இருப்பினும், முதல் பார்வையில் காதலுக்குப் பின்னால் ஒரு சிறப்பு ஹார்மோன் இருப்பதாக அறிவியலும் மருத்துவர்களும் நம்புகிறார்கள். இது ஒருவரை நோக்கி நம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. நீங்கள் குறிப்பிட்ட நபரை பார்க்கும்போது, உடல் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இவை நமது மூளையிலும் உடலிலும் உணர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன்கள். அதனால்தான் இது 'காதல் ஹார்மோன்' அல்லது 'அரவணைப்பு (CUDDLE) ஹார்மோன்' என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில், நாம் ஒருவரைப் பார்க்கும்போது, நம்மை நன்றாக உணரும்போது, உடலில் ஆக்ஸிடாஸின் ஹார்மோன் வெளியிடப்படுகிறது.
ஹார்மோன் வெளியான பிறகு என்ன நடக்கும்?
ஆக்ஸிடாஸின் ஹார்மோன் வெளியான பிறகு, நமக்குள் நேர்மறை உணர்ச்சிகள் உருவாகின்றன. இதன் மூலம் மட்டுமே நாம் ஒருவரையொருவர் நம்பி உணர்திறன் உடையவர்களாக மாற முடியும். இருப்பினும், காதலியை அதாவது நமக்கான அன்பானவரைப் பார்ப்பதால் மட்டும் இந்த ஹார்மோன் வெளியாகாது. பெற்றோர், குழந்தைகள், குடும்பத்தினர் அல்லது சிறப்பு நண்பர்களைப் பார்த்த பிறகும் வெளியாகலாம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஆக்ஸிடாஸின் ஹார்மோன்கள் மனித மூளையில் உள்ள ஹைபோதாலமஸிலிருந்து வெளியிடப்பட்டு பிட்யூட்டரி சுரப்பி வழியாக உடலில் பரவுகிறது. ஒருவரைக் கட்டிப்பிடிப்பது, கைகுலுக்குவது, உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போன்றவற்றின் மூலமும் இந்த ஹார்மோன் வெளியாகி, எதிரே இருப்பவரை நோக்கி நாம் உணர்ச்சிவசப்படுகிறோம்.
மற்ற காரணிகள்:
முதல் பார்வையில் காதல் என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். யாரென்றே தெரியாத ஒரு அந்நியர் மீது உடனடி, தீவிரமான மற்றும் நீண்ட கால காதல் ஈர்ப்பை உணர்வதே முதல் பார்வையிலேயேஏற்படும் காதலாகும். இதற்கு ரசாயன மாற்றம் மட்டுமின்றி, உடல் ஈர்ப்பு, மற்ற நபரை சுவாரஸ்யமாகக் கண்டறிதல் மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளை இணைத்தல் ஆகியவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்டது.
கண்டதும் காதலுக்கான அறிகுறிகள்:
- நல்ல உணர்வுகளின் அவசரத்தை உணர்வது
- அந்த நபரை நீண்ட நாட்களாக அறிந்திருப்பது போன்ற உணர்வு
- நபரிடம் ஈர்க்கப்பட்ட உணர்வு
- அதிகரித்த இதயத்துடிப்பை உணர்வது
- கொஞ்சம் மூச்சுத் திணறல்
- உடலை சூடாகவோ, சிவப்பாகவோ அல்லது காய்ச்சலாகவோ உணர்வது
- பதற்றமாக உணர்வது
- தூங்குவதில் சிரமம்
- பசியின்மை