விண்வெளியில் செடியா? இந்தியாவின் புதிய சாதனை...

இஸ்ரோ, விண்வெளியில் தட்டைப்பயிரின் விதையை வெற்றிகரமாக முளைக்க வைத்தது.

PSLV-C60 ராக்கெட் இரண்டு SpaDeX செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

செடியை வளர வைக்கும் சோதனை இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டது.

இந்த சோதனை புவியீர்ப்பு விசையின் குறைவான சூழலில் தாவர வளர்ச்சியை ஆராயும்.

4 நாட்களில் விதைகள் முளைத்தது. தற்போது இலைகளும் முளைத்தது.

விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை ஆராய்வதே இந்த சோதனையின் நோக்கமாகும்.

ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவை சரியான சூழலில் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை இந்த சோதனை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வந்துள்ளது.