மேலும் அறிய

Fact Check: அப்துல் கலாம், வாஜ்பாய் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா? பரவும் தகவல் உண்மையா?

Fact Check: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

அனைவருக்கும் வணக்கம். 10-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார்.

வைரலாகும் தகவல்:

75% மேல் மதிப்பெண் பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25000/ ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும்.

இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. உயர் நீதிமன்ற உத்தரவு எண்: WP (MD) NO.20559/2015" என்ற தகவல் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இத்தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இதுகுறித்து மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவ்வாறான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்று தேடினோம். அப்போது, அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த ஒரு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

உண்மை என்ன?

மேலும், "எஸ்எஸ்எல்சியில் 75% மற்றும் 12ஆம் வகுப்பில் 85% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 10,000 மற்றும் ரூ. 25,000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தவறான தகவல் என்றும் கூறியுள்ளது” என்று The Hindu ஊடகம் கடந்த மே 16-ஆம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, இதனை உறுதிப்படுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இது தொடர்பாக PIB Fact Check எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், "முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் 10 அல்லது 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே, இவ்வாறாக வைரலாகும் செய்தி தவறானது" என்று கூறப்பட்டுள்ளது.

முடிவு:

நம் தேடலின் முடிவாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக வைரலாகும் தகவல் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே  திருத்தி எழுததியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget