மேலும் அறிய

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !

"தருணம்" என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள "நீ Forever" திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இன்றைய GenZ  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 

நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (SaReGaMa) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 27 முதல் உங்கள் இதயங்களைக் கவர வருகிறது "நீ Forever".

தொழில்நுட்ப குழு விபரம் 

தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ் 
தயாரிப்பாளர்: புகழ் & ஈடன் 
எழுத்து  மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி 
இசை: அஸ்வின் ஹேமந்த் 
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி 
எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன் 
கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன் 
ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக் 
ஒப்பனை: கலைவாணி பாலன் 
பாடலாசிரியர்: கு.கார்த்திக் 
ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார் 
ஒலி கலவை: அரவிந்த் மேனன் 
VFX: Hocus Pocus 
DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட் 
நடனம்: விஜயராணி 
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ் 
டப்பிங்: டி-ஸ்டுடியோஸ் 
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்
மக்கள் தொடர்பு :  சதீஷ் (AIM)

தலைப்பு செய்திகள்

ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
72 ஆவது தேசிய விருது அறிவிப்பு விழா...யார் யாருக்கு விருது எதிர்பார்க்கலாம்
72 ஆவது தேசிய விருது அறிவிப்பு விழா...யார் யாருக்கு விருது எதிர்பார்க்கலாம்
Gatta Kusthi 2 : விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் மக்களை கவர்ந்ததா ? விமர்சனம் இதோ
Gatta Kusthi 2 : விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் மக்களை கவர்ந்ததா ? விமர்சனம் இதோ
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
iPhone 16 Discount: ரூ.10,000 தள்ளுபடி.! ஐபோன் 16 வாங்குற ஐடியா இருந்தா இந்த வாய்ப்ப தவற விடாதீங்க; எப்படி வாங்குறது.?
ரூ.10,000 தள்ளுபடி.! ஐபோன் 16 வாங்குற ஐடியா இருந்தா இந்த வாய்ப்ப தவற விடாதீங்க; எப்படி வாங்குறது.?
Chennai to Nellai Special train : சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Embed widget