மேலும் அறிய

Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் சென்று கொண்டிருக்கிறது.

கவலைக்கிடத்தில் அருண்:

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படும் இதயத்தைப் பின்தொடர்ந்து, அருண் உள்ளிட்டோர் காரில் செல்வதுடன் முந்தைய எபிசோடு முடிந்தது. இதற்கிடையில், சந்திரகலாவின் திட்டப்படி லாரி டிரைவர் மூக்கையா, அந்த ஆம்புலன்ஸை வழிமறித்து துரத்துகிறான். இதனால் எதிர்பாராத விதமாக அருணின் கார் பயங்கர விபத்தில் சிக்குகிறது. விபத்தில் சிக்கிய அருணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறுகிறது.

சந்தோஷத்தில் சந்திரகலா:

விபத்து நடந்த தகவலை மூக்கையா, மருதுவிடம் தெரிவிக்கிறான். மருதுவும் உடனே சந்திரகலாவிடம் இதைப் பற்றிச் சொல்ல, தன்னுடைய திட்டம் வெற்றியடைந்துவிட்டதாக நினைத்து சந்திரகலா சந்தோஷப்படுகிறாள். மறுபக்கம், கார்த்திக் பலமுறை அருணுக்குப் போன் செய்தும் அவன் அழைப்பை எடுக்காததால், கார்த்திக்குச் சந்தேகம் அதிகமாகிறது.

உயிரிழந்த அருண்:

இதற்கிடையில், விபத்தைப் பார்த்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். மருத்துவமனையில் இளையராஜாவுக்குச் சுயநினைவு திரும்பியதும், விபத்தில் அருண் உயிரிழந்துவிட்ட அதிர்ச்சியான செய்தி தெரியவருகிறது. இதைக் கேட்டதும் இளையராஜா நிலைகுலைந்து போகிறான். அருணை இழந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் மருத்துவமனையிலேயே கதறி அழுகிறான்.

இந்தச் செய்தியை இளையராஜா, கார்த்திக்கிடம் சொல்ல, அவனாலும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. செய்வதறியாமல் தவிக்கும் கார்த்திக், மருத்துவமனையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கதறி அழுகிறான். அப்போது அங்கு வரும் மயில்வாகனம் என்ன நடந்தது என்று கேட்க, நடந்த விஷயங்களைச் சொல்லும் கார்த்திக், இந்தச் செய்தியை இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான்.

வீணான இதயம்:

இதற்கிடையில், சாமுண்டீஸ்வரியின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்ட இதயம் விபத்தில் சேதமடைந்துவிட்டதால், அதை இனி அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

அதே நேரத்தில், மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த அருணின் இதயம் சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்தமாக இருக்கும் என்பது தெரியவருகிறது. ஒருபக்கம் சொந்தத்தை இழந்த சோகத்தில் இருந்தாலும், மறுபக்கம் தன்னுடைய அத்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் கார்த்திக் உறுதியாக இருக்கிறான்.

கார்த்திக்கின் தைரியமான முடிவு:

இதனால், அருணின் இதயத்தைச் சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்த கார்த்திக் துணிச்சலான முடிவை எடுக்கிறான். அதுமட்டுமில்லாமல், இந்த விஷயம் குடும்பத்தில் யாருக்கும் தெரியக்கூடாது என்றும் முடிவு செய்கிறான்.

மறுபக்கம், சாமுண்டீஸ்வரியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கான நேரமும் குறைந்துகொண்டே வருகிறது. இந்தச் சூழலில், கார்த்திக் ஸ்பை நர்ஸ் மூலமாக இதயம் தயாராக இருப்பதாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கிறான். இதையடுத்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தொடங்குகிறார்கள்.

அடுத்து நடப்பது என்ன?

இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய பிறகும் எப்படி மீண்டும் இதயம் கிடைத்தது என்று தெரியாமல் சந்திரகலா குழம்பிப் போகிறாள். மறுபக்கம், அருணின் உடலிலிருந்து இதயத்தைப் பாதுகாப்பாக எடுத்து, மற்ற உறுப்புகளையும் தானத்திற்காக முறைப்படி ஒப்படைத்துவிட்டு, அந்த இதயத்துடன் கார்த்திக் சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு விரைந்து வருகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை காணத்தவறாதீர்கள். 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு புது ஸ்கெட்ச்! டாக்டருடன் கூட்டு சேர்ந்த ஸ்ரேயா! கார்த்திகை தீபத்தில் புது ட்விஸ்ட்
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு புது ஸ்கெட்ச்! டாக்டருடன் கூட்டு சேர்ந்த ஸ்ரேயா! கார்த்திகை தீபத்தில் புது ட்விஸ்ட்
Jailer 2: இங்க நான்தான் கிங்..
Jailer 2: இங்க நான்தான் கிங்..". ஓடிடி-யிலும் சக்கைப் போடு போடும் ஜெயிலர் 2! குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிதான்!
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
TN Govt: 360 ஏக்கரில் ரூ.1000 கோடி ப்ராஜெக்ட்..! வேலூருக்கு ஓகே சொல்லுமா தமிழ்நாடு அரசு? உருவாகுமா வேலைவாய்ப்பு?
360 ஏக்கரில் ரூ.1000 கோடி ப்ராஜெக்ட்..! வேலூருக்கு ஓகே சொல்லுமா தமிழ்நாடு அரசு? உருவாகுமா வேலைவாய்ப்பு?
Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Embed widget