Watch Video: பாஃம் போடுறதுக்கு 10 அடி குச்சியா... ரொம்ப ஓவரா போறீங்க!
உண்மையில் இது நகைப்புக்காக எடுக்கப்பட்ட வீடியோ தான்.... ஆனால் அதன் நோக்கம் நிறைவேறியிருக்கிறது.
தீபாவளி முடிந்தாலும், அது எப்போதும் நினைவில் இருக்கும் பண்டிகை என்பதால் அது தொடர்பான வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. தீபாவளியில் முக்கியமான விசயம் பட்டாசு. பட்டாசு வெடிப்பதில் பல ஃபன்னி வீடியோஸ் வெளியாகி நாமெல்லாம் சிரித்து சிரித்து களைத்து போயிருப்போம். இதுவும் அது மாதிரியான வீடியோ தான்.
ஒரு பட்டாசை கொளுத்துவற்கு இளைஞர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்... கையில் பிடித்து கவட்டைக்குள் வெடிக்கும் காலகட்டத்தில் வசிக்கும் இளைஞர்களை தான் நாம் பார்த்திருப்போம், இந்த இளைஞர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள், போடுவது என்னவோ சிவகாசி ஃபாம் தான்; ஆனால் இவர்கள் கொடுக்கும் பில்டப்... உண்மையான ஃபாம் போடுவதைப் போன்று இருக்கும்.
வெடிக்கு பயந்து சிலர் குச்சிகளை பயன்படுத்தி ஊதிபத்திகளை கட்டி வெடிப்பதை நாம் பார்த்திருப்போம். இவர்கள் 10 அடிக்கு மேல் பெரிய குச்சி ஒன்றில், ஊதுபத்தியை கட்டி, பட்டாசு வெடிக்க முயற்சிக்கிறார்கள். கம்பு தூரமாக இருப்பதால் அதை தாங்குவது எளிதல்ல. எனவே இருவராக அந்த கம்பை பிடிக்கிறார்கள். வெடி வெடிப்பதை விட அந்த கம்பை பேலன்ஸ் செய்வது தான் பெரிய சவாலாக அவர்களுக்கு இருந்தது.
கடைசி வரை அந்த வெடியை பற்ற வைக்கவில்லை என்பது வேறு கதை. ஆனால் அதற்காக அவர்கள் கொடுத்த பில்டப் இருக்கிறதே... அது தான் அந்த வீடியோவின் வெற்றி.
உண்மையில் இது நகைப்புக்காக எடுக்கப்பட்ட வீடியோ தான்.... ஆனால் அதன் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது போன்ற பல குசும்பு இளைஞர்கள், தங்கள் திறமையை வீடியோக்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அதில் பலர் வெற்றியும் பெறுகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகளுக்கு...
‛கீழ்த்தரமான அரசியல் அரங்கேற்றம்....’ கொதித்து எழும் பாஜக தலைவர் அண்ணாமலை!https://t.co/4hE4Xczuhn#ChennaiRains #BJP #Annamalai #Chennai #TamilNaduRains
— ABP Nadu (@abpnadu) November 10, 2021
மூன்றாவது திருமணம்... 4 வயது குழந்தையுடன் எஸ்கேப் ஆன தாய்... நடந்தது என்ன?https://t.co/UkvpKxQDnv#Coimbatore #News
— ABP Nadu (@abpnadu) November 10, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்