Ram - Nivin Pauly : ஒரே நாளில் பிறந்தநாள் காணும் நிவின் பாலி , ராம்...எழு கடல் ஏழு மலை சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய படக்குழு
இயக்குநர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகிய இருவரும் இன்று ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது

இயக்குநர் ராம்
தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி இயக்குநர் ராம் . கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சமூக பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் ராம் தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். உலகமயமாக்கல் அதன் விளைவாக தனிமனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் நெருக்கடிகள், தனிமனித அகத் தேடல்களை இவரது கதைகள் மையமாக கொண்டிருப்பவை. ராமின் படங்கள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பவர்களும் நேர்காணலில் அவரது உரையாடல்களால் கவரப் படுகிறார்கள். தற்போது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை.
நிவின் பாலி , அஞ்சலி , சூரி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதுவரை இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ மற்றும் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. சர்வதேச திரைப்பட விழாவான ராட்டர்டாம் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப் பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.
நன் மாந்தர்களின் இயல்பு அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. சக மனிதனை எவ்வளவு ஆழமாகவும் அழுத்தமாகவும் ஏற்றத்தாழ்வில்லாமல் நேசிக்கிறோம் என்பதே நம்மின் உயர் குணமாகிறது. அத்தகைய உயர்ந்த குணத்தை தன் இயல்பிலேயே கொண்டிருக்கும் அன்பன் இயக்குநர் ராம். எளிமையின் சுரங்கம். எண்ணற்ற… pic.twitter.com/OHLhlLbnuq
— sureshkamatchi (@sureshkamatchi) October 11, 2024
பிறந்தநாள் காண்டும் ராம் நிவின் பாலி
இயல்பான நடிகன். தன்னுனர்ந்து பல பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும் தைரியன். கனவுத்தொழிற்சாலையில் தோண்டியெடுக்கப்பட்ட இன்னொரு வரம். எங்கள் ஏழு கடல் ஏழு மலையின் நாயகன். மற்றவர்களை மகிழ்விக்கும் இன்னும் பல படங்களை நமக்கு தந்து சிறந்துயர இயற்கையும் இறைவனும் துணைபுரியட்டும். அன்பின்… pic.twitter.com/u1yV0qWpiX
— sureshkamatchi (@sureshkamatchi) October 11, 2024
இன்று இயக்குநர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகிய இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.இதனை முன்னிட்டு ஏழு கடல் ஏழு மலை படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏழுகடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படம் தவிர்த்து நடிகர் மிர்ச்சி விவாவை வைத்து ராம் மற்றொரு படத்தை இயக்கியுள்ளார்.





















