Yash Chopra Wife Death: பாலிவுட் பிரபலம் யஷ் சோப்ராவின் மனைவி மரணம் ... சோகத்தில் பாலிவுட் ரசிகர்கள்
மறைந்த பாலிவுட்டின் முக்கிய பிரபலமான யஷ் சோப்ராவின் மனைவி பமீலா சோப்ரா உடல் நலக்குறைவால் காலமானார்.
மறைந்த பாலிவுட்டின் முக்கிய பிரபலமான யஷ் சோப்ராவின் மனைவி பமீலா சோப்ரா உடல் நலக்குறைவால் காலமானார்.
பாலிவுட்டில் பிரம்மாண்டமான படங்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸை உருவாக்கியவர் யாஷ் ராஜ் சோப்ரா. பாலிவுட்டின் மிக முக்கியமான பிரபலமான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் ஆதித்யா சோப்ரா யாஷ் ராஜ் பிலிம்ஸை நிர்வகித்து வருகிறார்.
1970 ஆம் ஆண்டு பமீலா யாஷ் சோப்ராவை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதித்யா மற்றும் உதய் சோப்ரா என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆதித்ய சோப்ரா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக உள்ளார். இவர் நடிகை ராணி முகர்ஜியை திருமணம் செய்துக் கொண்டார். உதய் சோப்ராவும் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளார்.
அதேசமயம் பமீலா சோப்ரா பல திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். யாஷ் சோப்ரா இயக்கிய கபி கபி (1976) முதல் முஜ்சே தோஸ்தி கரோகே வரை! (2002) அவர் பாடல்களை பாடியுள்ளார். 1993 ஆம் ஆண்டு ஐனா திரைப்படத்தை பமீலா தனியாக தயாரித்தார். அதேசமயம் பமீலா கணவர் யாஷ் சோப்ரா, அவரது மகன் ஆதித்யா சோப்ரா மற்றும் எழுத்தாளர் தனுஜா சந்திரா ஆகியோருடன் இணைந்து தனது கணவரின் 1997 திரைப்படமான “தில் தோ பாகல் ஹை”யின் திரைக்கதையை எழுதியிருந்தார். இந்த படத்தின் ஏக் துஜே கே வாஸ்தே என்ற தொடக்கப் பாடலில் பமீலா மற்றும் யாஷ் சோப்ரா இணைந்து ஒன்றாகத் தோன்றினர்.
74 வயதான அவர் கடந்த 15 நாட்களாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. அங்கு மருத்துவர்கள் பமீலாவுக்கு வென்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் இன்று காலை 11 மணியளவில் அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் குடும்ப முறைப்படி நடைபெற்ற நிலையில் மும்பையில் பமீலா உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் பமீலா சோப்ராவின் மரணத்தை உறுதிப்படுத்தும் அறிக்கையை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கனத்த இதயத்துடன், 74 வயதான பமீலா சோப்ரா இன்று காலை காலமானார் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். அவரது தகனம் இன்று காலை 11 மணியளவில் மும்பையில் நடைபெற்றது. அவர் உடல்நலம் பெற வேண்டி நடந்த உங்கள் பிரார்த்தனைக்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பமீலா மறைவுக்கு இந்திய திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.