Ponniyin Selvan:பொன்னியின் செல்வன் : நந்தினி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா ?
"ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்போது, மிகுந்த மனநிறைவுடன், நிறைவான உணர்வோடு இருக்கிறேன்"
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன் ‘ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருப்பது நாம் அறிந்ததுதான். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டு முக்கியமான பெண் காதாபாத்திரங்கள் என்றால் அது குந்தவையும் நந்தினியும்தான். குந்தவையாக த்ரிஷா நடிக்க , நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராய் இந்தி நடிகை என்பதால் அவருக்கு யார் குரல் கொடுத்திருப்பார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் , அது பிரபல நடிகையும் , முன்னணி டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் என்பது தெரிய வந்துள்ளது. தீபா வெங்கட் நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். ஒரு போல்டான குரலுக்கு சொந்தக்காரி. அவர்தான் நந்தினி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார்.அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
நந்தினி டப்பிங் அனுபவம் குறித்து தீபா வெங்கட் பகிர்ந்ததாவது :
இதைப் பற்றி நான் என்ன சொல்வது? கிரசென்ட் அவென்யூ சென்று மெட்ராஸ் டாக்கீஸ் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால் வீட்டுக்குப் போவது போல் இருக்கிறது. அலுவலகத்தில் உள்ள டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்களுடன் அன்பான, நட்பு முகங்கள் மற்றும் வேடிக்கையான அரட்டைகள் நினைவுக்கு வருகின்றன. நான் டப்பிங் பகுதியில் நுழையும்போது உங்களுக்கு என்ன சவால்கள் காத்திருக்கின்றன என்பதைத் தவிர. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்போது, மிகுந்த மனநிறைவுடன், நிறைவான உணர்வோடு இருக்கிறேன்.
கன்னத்தில் முத்தமிட்டால், குரு, செழியா (காற்று வெளியிடையின் தெலுங்கு பதிப்பு), செக்க சிவந்த வானம் (தமிழ் மற்றும் தெலுங்கு) மற்றும் இப்போது, பிஎஸ்-1 போன்ற படங்களில் ஒரு பகுதியாக இருப்பது நான் நினைப்பதை விட பல வழிகளில் என்னை வளப்படுத்தியுள்ளது.மயக்கும் மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராயிக்கு இது எனது முதல் படம். அவரைபற்றி நான் இன்னும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அது தனி ஒரு பதிவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மணி சார், இதற்கு நன்றி மட்டும் போதாது. எல்லா அன்புக்கும் நன்றி” என முடித்துள்ளார் தீபா.