மேலும் அறிய

புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

யூடியூப் சேனல் ஊழியரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வாட்டர்மெலஸ் ஸ்டார் திவாகர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் "வாட்டர்மெலன் ஸ்டார்" என்ற பெயரில் பிரபலமான திவாகர், யூடியூப் சேனல் ஊழியரிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் மதுரைக்கு சென்று அவரை கைது செய்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, யூடியூப் சேனலில் பணியாற்றும் ஒருவரிடம் திவாகர் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, மதுரையில் இருந்த திவாகரை போலீசார் கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் பின்னணி மற்றும் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்டர்மெலன் திவாகர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தன்னை "நடிப்பு அரக்கன்" என அறிமுகப்படுத்திக் கொள்ளும் அவர், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதே நேரத்தில், சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக அடிக்கடி பேசுபொருளாகி வருகிறார்.

சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் கேமராவை உடைத்ததாகவும், அங்கு தன்னைத் தாக்க முயன்றதாகவும் கூறி திவாகர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் உள்ளிட்டோர் தன்னைத் தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டி காவல்துறையில் புகார் அளித்திருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியது. அந்த குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்ததோடு, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

தற்போது யூடியூப் சேனல் ஊழியரை மிரட்டி பணம் கேட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள புதிய வழக்கில் திவாகர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது பெயரை மீண்டும் சர்ச்சையின் மையத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணையின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget