Watch Video : என்ன சொல்றீங்க... பென் 10 கார்டூனில் அந்த பாட்டை பாடியவர் இவரா ?
90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த பென் 10 அனிமேஷன் தொடரில் வரும் டைட்டில் பாடலை தான் பாடியதாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்
பென் 10
90 ஸ் கிட்ஸ்களை வசியம் செய்தது போல் தொலைக்காட்சி முன் கட்டி போட்டு வைத்த அனிமேஷ் தொடர் பென் 10. வின்வெளியில் இருந்து வந்து விழும் கைகடிகாரம் பென் என்கிற 10 வயது சிறுவனுக்கு கிடைக்கிறது. இந்த கடிகாரத்தை பயன்படுத்தி 10 வெவ்வேறு ஏலியன் ரூபங்களை மாற முடியும். வெளியான முதல் எபிசோடிலேயே இன்ஸ்டண்ட் வெற்றி பெற்றது இந்த தொடர். நாளடைவில் குழந்தைளின் மனம் கவர்ந்த கார்டூனாக மாறியது.
பென் 10 பாடலை பாடிய சின்மயி
தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெள்யானது. பென் 10 தொடர் மட்டுமில்லாமல் இதன் டைட்டில் பாடலும் குழந்தைகளிடம் பிரபலமானது. இந்த பாடலை பாடியவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி என்று தற்போது தெரியவந்துள்ளது.
I sang the Ben10 title song in Tamil and in Telugu too. I have been asked this a few times so maybe before I forget that I sang it, better to tweet this out 😂https://t.co/dM3oALoOj6https://t.co/UbwIlH3W1f
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2024
தனது எக்ஸ் பக்கத்தில் சின்மயி இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். இது தெரிந்த ரசிகர்கள் இவர் எப்படி இந்த பாடலை பாடினார் என ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து சின்மயி இந்த பாடலை பாடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்
View this post on Instagram