Watch Video | களைகட்டும் திருமண ஏற்பாடுகள்.. ஏகப்பட்ட கெடுபிடிகள்.. வைரலாகும் கத்ரீனா - விக்கி வீடியோ..
சங்கீத்துடன் நாளை தொடங்கும் திருமணம் தொடங்கும் நிலையில், டிசம்பர் 9 ஆம் தேதி மெஹந்தி நிகழ்வு நடக்க இருக்கிறதாம்.
பாலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுணாக இருக்கிறது கத்ரீனா - விக்கி கெளசலின் திருமணம். தற்போது அதற்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது. திருமணத்தை முன்னிட்டு ஜோத்பூரில் இருந்து செல்ல தனியார் விமான நிலையத்திற்கு வந்த விக்கி கெளசலும், கத்ரீனாகைஃப் அங்குள்ள பத்திரிக்கையாளர்களுக்கு கையசைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#KatrinaKaif leaves for her wedding in Jaipur.#KatrinaVickywedding pic.twitter.com/t4ztcQjzRT
— Rohit Khilnani (@rohitkhilnani) December 6, 2021
#VickyKaushal leaves for his wedding.
— Rohit Khilnani (@rohitkhilnani) December 6, 2021
Clicked at pvt airport in Mumbai. #KatrinaVickywedding pic.twitter.com/igYmnxRYNs
பாலிவுட்டே உற்று நோக்கும் திருமணமாக இந்தத் திருமணம் இருக்கும் நிலையில், திருமணம் குறித்த சின்ன சின்ன அப்டேட்டுக்கு கூட ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். திருமண ஏற்பாடுகளெல்லாம் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், திருமணம் ராஜாஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸஸ் ஃபோர்ட் ஹோட்டலில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சங்கீத்துடன் நாளை தொடங்கும் திருமணம் தொடங்கும் நிலையில், டிசம்பர் 9 ஆம் தேதி மெஹந்தி நிகழ்வு நடக்க இருக்கிறதாம். இந்த மெஹந்தி நிகழ்வில் கத்ரீனாவுக்கென்றே ஸ்பெஷலாக ஜோத்பூரில் உள்ள பாலி மாவட்டத்தில் இருந்து Sojat மெஹந்தி வரவழைக்கப்பட இருக்கிறதாம். எந்த வித ரசாயனமும கலக்கப்படாமல்முழுக்க முழுக்க இயற்கையான முறையில், கைகளால் மட்டுமே இந்த மெஹந்தி உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அதனைத்தொடர்ந்து வரவேற்புடன் டிசம்பர் 10 ஆம் தேதி திருமணம் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெடுபிடிகள்
தம்பதியினரை யாரும் வெளியில் உள்ளவர்கள் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, திருமணம் நடக்கும் இடத்திற்கு மணமக்கள் ஹெலிகாப்டரில் வரவிருக்கிறார்களாம். திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை அவர்களின் பேரை வைத்து குறிப்பிடாமல் இருக்க சீக்ரெட் கோடு கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுமட்டுமன்றி வரும் விருந்தினர்கள் அங்கிருக்கும் NDA பத்திரத்தில் கையெழுத்து இட வேண்டுமாம். இவர்கள் யாரும் திருமண நிகழ்வுகளை போட்டோ எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதி கிடையாதாம்.
திருமணத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு போட்டோவையும் திருமண ஏற்பாடுகளை செய்யும் நபர்களின் அனுமதி இல்லாமல் சமூக வலைதளங்களில் பதிவிட கூடாதாம். இதுமட்டுமன்றி விருந்தினர்களை அழைத்து வரும் டிரைவர்கள் பேஸிக் போனைதான் பயன்படுத்த வேண்டுமாம். திருமண பாதுகாப்பிற்காக, ராஜஸ்தான் போலீசுடன் ஜெய்பூரில் இருந்து 100 பவுன்சர்களும் வரவழைக்கப்பட்டுள்ளார்களாம். இந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர் சிக்ஸ் சென்ஸஸ் ஃபோர்ட் மேனஜர் மீது புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரில் அங்குள்ள பாரம்பரிய கோயிலின் வழியானது அடைக்கப்பட்டதால் அங்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்