Watch Video: வெறித்தனமான வசூல்... விருமன் சக்சஸ் மீட்டிற்கு வித்தியாசமான் கெட்-அப்பில் வந்த சூர்யா!
நான்காம் நாளான நேற்று (ஆக.15) படம் 7 முதல் 9 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சூர்யா தயாரிப்பில், கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள விருமன் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியானது.
வசூல் வேட்டை
கார்த்தி நடித்து இதுவரை வெளியான படங்களில் முதல் வாரத்தில் அதிக வசூலை இந்தப் படம் தான் வாரிக் குவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் வெளியான மூன்று நாளில் மட்டும் 25.75 கோடி ரூபாய் வசூல் வேட்டையாடியுள்ளது. நான்காம் நாளான நேற்று (ஆக.15) படம் ரூ.7 முதல் ரூ.9 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து இன்றும் இப்படம் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி மக்களைக் கவர்ந்து வருகிறது.
Celebration of families!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 16, 2022
Celebration of success ✨#Viruman family success meet 🔥@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/xDqsdsMQjb
தொடங்கிய சக்சஸ் மீட்
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சக்சஸ் மீட் விழா முன்னதாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவுக்கு தாரை தப்பட்டை முழங்க நடிகர் கார்த்தி, படத்திம் தயாரிப்பாளர் சூர்யா இருவரும் வருகை தரும் காட்சிகள் முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகின்றன.அதில் நடிகர் சூர்யா வித்தியாசமான கெட் அப்பில் வந்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.
• @Suriya_offl Anna & @Karthi_Offl Anna Arrives Together For #Viruman Success Function!!@rajsekarpandian @2D_ENTPVTLTD #EtharkkumThunindhavan #Vanangaan #VaadiVaasal pic.twitter.com/4TMXAi6cEK
— MaduraiSFC (@MaduraiSfc) August 16, 2022
முன்னதாக விருமன் படத்தின் வெற்றி குறித்து அதன் ஆடியோ உரிமையைப் பெற்ற சோனி நிறுவனம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
முத்தையா படம்
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்'.
சூர்யா, ஜோதிகாவுக்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்