Viruman Release Date: விருமன் வரான்: திரைவிருந்து தரான்... வெளியீட்டு தேதியை வெளியிட்ட 2டி எண்டர்டைன்மெண்ட்!
விருமன் திரைப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்’.
இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா களமிறங்கியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, வீரநடை போட்டு வருகிறான் #விருமன் 🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 18, 2022
A @SakthiFilmFctry Release 🤝#VirumanFromAug31@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial @sakthivelan_b pic.twitter.com/7hGu2F2kvl
இந்தநிலையில், 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக வேறு எந்தவொரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளநிலையில், விருமன் திரைப்படத்திற்காக கார்த்தி களமிறங்கினார். தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது.
3️⃣M+ Realtime views it is!#KanjaPoovuKannala Video Promo is now streaming ▶️ https://t.co/sPgPIO3E8I
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 10, 2022
🎤 - @sidsriram
✍️ - #KarumathurManimaran
🎶 - @thisisysr#Viruman #VirumanFirstSinglePromo@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @AditiShankarofl @rajsekarpandian pic.twitter.com/cL7IoYldvk
முன்னதாக, விருமன் திரைப்படத்தில் இருந்து 'கஞ்சா பூ' பாடல் ப்ரோமோ சாங் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்