மேலும் அறிய

Vikram Vedha song Bande: ‛வாழ்கை ஓடி ஓடி.. அலைஞ்சி திரிஞ்சி..’ வேதாவாக மிரட்டும் ஹிருத்திக்.. வெளியான இந்தி வீடியோ!

விக்ரம் வேதா’ படத்தின் இந்தியின் ரீமேக்கில் இருந்து பந்தே பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

விக்ரம் வேதா’ படத்தின் இந்தியின் ரீமேக்கில் இருந்து பந்தே  பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’. இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான், நடிப்பில் அதே பெயரில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. 

தமிழில் உருவான இந்தப்படம் சினிமா உலகில் அதிக கவனம் பெற்ற இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்தத்தகவலை  கடந்த மார்ச் மாதம் புஷ்கர் மற்றும் காயத்ரி உறுதிப்படுத்தினர். இந்தப்படத்தை தமிழில்  ‘விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த YNOT Studios -வுடன் இணைந்து Plan C Studios மற்றும் Reliance Entertainment, T-Series Films நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. இந்தப்படத்தில் ஹிருத்திக்ரோஷன் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்திலும்,  சைஃப் அலி கான் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன்  ராதிகா ஆப்தே, ரோகித் சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தி  ரீமேக்கிற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 

 

                                         

பாடல்களுக்கு  விஷால் சேகர் இசையமைத்துள்ளார். 175 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி படத்தின் டீசரும், கடந்த 8 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி  அந்தப்படத்தில் இருந்து  ‘Alcoholia’ பாடல் வெளியிடபட்டது.  

தமிழில் இந்தப்பாடல் சேட்டா என்ற கதாபாத்திரத்திற்கு வேதா கதாபாத்திரம் பரோட்டாவை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும். தொடர்ந்து பார்ட்டி நடக்க, ‘டசக்கு டசக்கு’ பாடல் வரும். ஹிந்தியில் அதே சிச்சுவேஷனில்  ‘Alcoholia’ பாடல் வருகிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து  ‘Bande’ பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழில் விக்ரம் வேதா படத்தில் தீம் பாடலாக வெளியான ‘வாழ்கை ஓடி ஓடி’ பாடலின் மறு உருவாக்கமாக ‘Bande’ பாடல் உருவாகியிருக்கிறது. இரத்தமும் சதையுமான காட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

 

                                           

தம்பதிகளான புஷ்கர் - காயத்ரி ஆர்யா நடிப்பில் வெளியான ‘ஓரம் போ’ படம் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமாயினர். தொடர்ந்து நடிகர் சிவா நடிப்பில் உருவான  'வா - குவாட்டர் கட்டிங்' படத்தை இயக்கிய அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டும் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படம் இவர்களது கேரியரில் மட்டுமல்லாது, விஜய் சேதுபதி கேரியரிலும் மிக முக்கியமான படமாக அமைந்தது.

சினிமா உலகில் அதிக கவனம் பெற்ற இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அந்தத்தகவலை கடந்த மார்ச் மாதம் புஷ்கர் மற்றும் காயத்ரி உறுதிப்படுத்தினர். இந்தப்படத்தை தமிழில்  ‘விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த YNOT Studios -வுடன் இணைந்து Plan C Studios மற்றும் Reliance Entertainment, T-Series Films நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.

இந்தப்படத்தில் ஹிருத்திக்ரோஷன் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்திலும், சைஃப் அலி கான் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன்  ராதிகா ஆப்தே, ரோகித் சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தி  ரீமேக்கிற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு  விஷால் சேகர் இசையமைத்துள்ளார். 175 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Embed widget