Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் சீரிஸில் நடிக்க கூப்பிட்ட கமல்.. மறுத்த விக்ரம்.. என்ன காரணம் தெரியுமா?
பொன்னியின் செல்வன் நாவலை எடுப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் தன்னை அணுகியதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலை எடுப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் தன்னை அணுகியதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வனின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. வசூலில் ரூ.500 கோடிக்கும் மேல் சாதனைப் படைத்த இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருந்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார். அந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாரதிராஜா, பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆருக்கு எடுக்க ஆசை. என்னையும், கமல், ஶ்ரீ தேவி ஆகியோரையும் அழைத்தார். நீ படத்தை எடுக்குற என என்னிடம் சொன்னார். கமலை வந்தியத்தேவன் கேரக்டர்ல நடிக்க வைக்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிவித்தார்.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் 1 ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தான் இந்த நாவலை படமாக எடுக்க முயற்சித்த சம்பவத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாகம் 2க்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விக்ரம் பொன்னியின் செல்வனில் நடிக்க தன்னை அழைத்த விஷயத்தை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொலைக்காட்சி தொடரை எடுக்க கமல்ஹாசன் என்னை அணுகினார் என்பதை விவரித்தார். ஆனால் சின்னத்திரைக்கு அதை செய்ய மறுத்த அவர், இந்த நாவலை வெள்ளித்திரைக்கு மாற்றியமைக்கும்போது அதை செய்வேன் என்று சூப்பர் ஸ்டாரிடம் கூறினார்.
கமல் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, “பொன்னியின் செல்வனை தொலைக்காட்சி தொடராக தயாரிக்க விரும்புவதாக கூறினார் . என்னிடம், 'நீங்கள் இதில் ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதில் நீங்கள் எந்த வேடத்தை வேண்டுமானாலும் செய்யலாம். அதாவது ஆதித்ய கரிகாலன், அருண்மொழிவர்மன், வந்தியத்தேவன் என மூன்று வேடங்களில் ஏதாவது ஒன்றில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் புத்தகங்களைப் படித்துள்ளேன்” என கூறிவிட்டு அவரிடம் கூறிவிட்டு மறுநாள் வந்து சந்தித்தேன். கமல்ஹாசனிடம், “இந்த நாவல் பெரிய திரைக்கு வரும் வரை நான் காத்திருக்கிறேன்” என்று சொன்னதாக விக்ரம் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக எடுக்க முயற்சித்தபோது எல்லாம் அதில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் விக்ரம் தான் முதலில் இருந்தே அவரது தேர்வாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.