மேலும் அறிய

Vikram Promo: புக்கிங் தேதியுடன் வெளியான விக்ரம் ப்ரோமோ.. பஞ்சதந்திரம் நடிகர்களை வைத்து மாஸ் செய்த லோகேஷ்..!

விக்ரம் பட பிரோமோஷன் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

விக்ரம் பட பிரோமோஷன் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விக்ரம் படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் வேலைகள் அசுரவேகத்தில் நடந்து வரும் நிலையில், படத்தை பிரோமோட் செய்யும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், “ பஞ்ச தந்திரம் படத்தில் கமல்ஹாசனுடன் ஒன்றாக நடித்த நடிகர்கள் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். வீடியோவில் காலையில் பேப்பரை பார்க்கும் யூகி, மீதமுள்ள மூவருக்கு கால் செய்து, கமல் படம் பேப்பரில் முதல் பக்கத்தில் வந்திருக்கிறது. என்ன இது என்று கேட்கிறார். இதைக்கேள்விப்பட்ட பிறர், கமலிடமே போன் செய்து கேட்கலாம் என்று கூற,.. கமலுக்கு கால் போகிறது.. அவர் ஹலோ என்கிறார். தொடர்ந்து விக்ரம் படத்தின் டிக்கெட் புக்கிங் வரும் 29 ஆம் தேதி ஓப்பன் ஆகிறது என்ற அறிவிப்புடன் அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Raaj Kamal Films International (@rkfioffl)

கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. டிரெய்லர் வெளியானபோதே, படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர். 'விக்ரம்' படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவர் க்ளைமாக்ஸில் ஒரு கேமியோ வேடத்தில் காணப்படுவார் என்றும் செய்திகள் பரவின.

கேமியோ ரோலில் சூர்யா

அந்த செய்தியை நிஜமாக்குவதுபோல, அந்த நிகழ்ச்சிலேயே படத்தின் இயக்குநர் லோகேஷ் சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்தார். இந்த நிலையில், விக்ரம் படத்தின் மூன்றாம் உருவாக இருப்பதாகவும், அதற்கான காரணமாக சூர்யா இருப்பார் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget