மேலும் அறிய

Vijayakanth Death: “சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் உங்களுக்காக ஒரு மாளிகை திறந்திருக்கும்” - விஜயகாந்த் குறித்த மிஷ்கின்

Captain Vijayakanth: கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் பாதுகாப்பு கருதி விஜயகாந்த் உடலானது சென்னை தீவுத்திடலுக்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கேயும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு (Vijayakanth) அஞ்சலி செலுத்தும் வகையில் இயக்குநர் மிஷ்கின் பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் பாதுகாப்பு கருதி விஜயகாந்த் உடலானது சென்னை தீவுத்திடலுக்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கேயும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வந்திருக்கும் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் விஜயகாந்த் உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலை 4.45 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத பிரபலங்கள் வீடியோ வாயிலாகவும், சமூக வலைத்தள பதிவு மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது உடலானது முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின்  விஜயகாந்த் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில்,  “ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில், தமிழர்களின் மனதில் ஒரு பெரும் ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிழற் கொடுத்து, கனி கொடுத்து, அருள் கொடுத்து, அன்பு கொடுத்து, இன்று இந்த மண்ணிலே சாய்ந்து விட்டீர்களே ஐயா! - நீங்கள் சாய்ந்தாலும் இந்த பூமி தவம் என உங்களை சுமக்கும். உங்கள் வேர்கள் எங்கள் இதயங்களில் பயணிக்கும். நீங்கள் விட்டுச் சென்ற விழுதுகள் இந்த பூமியில் மரங்களாய் வளரும். சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் அங்கே உங்களுக்காக ஒரு மாளிகை திறந்திருக்கும். ஓய்வெடுங்கள் ஐயா. என்றும் சிரித்த உங்கள் கன்னங்களில் நான் முத்தமிடுகிறேன்” - அன்புடன் மிஷ்கின் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: தீவுத்திடல் விஜயகாந்த் உடல்.. விடிய விடிய அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

தலைப்பு செய்திகள்

Gatta Kusthi 2 : விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் மக்களை கவர்ந்ததா ? விமர்சனம் இதோ
Gatta Kusthi 2 : விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் மக்களை கவர்ந்ததா ? விமர்சனம் இதோ
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி

Embed widget