மேலும் அறிய

Bharathi Kannamma | ”கண்ணம்மா நல்லவளா..” ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த பாரதி... முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா?

கண்ணம்மா நல்லவள் என்று கோவிலுக்குள் வைத்து தெரிந்துக் கொள்கிறார் பாரதி.

விஜய் டிவியின் முக்கிய சீரியலாக பாரதி கண்ணம்மா தொடர் உள்ளது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதன்மை கதாப்பாத்திரத்தில் அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிப்பிரியன் நடித்த இந்த  சீரியல் பரபரப்பான நிலையில், கண்ணம்மா கதாபாத்திரத்தில்  நடித்துக் கொண்டிருந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து வெளியேறினார். இதற்கு காரணம் சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அவர் எந்த படத்திலும் நடிக்கப் போவதாக இதுவரை அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் விஜய் டிவி விரைவில் தொடங்கவிருக்கும் ‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியில் அவர் குக்காக கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில், வினுஷா தேவி நடித்து வருகிறார். தொடக்கத்தில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தை, வெண்பா பாரதி திருமணம், என பரபரப்பான திருப்பங்களுடன் இருந்த இந்த சீரியல் தற்போது ரசிகர்களை சோதிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தனது மனைவி கண்ணம்மாவின் கர்ப்பத்தில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளி ஏற்றிய பாரதி தற்போது நீதிமன்ற உத்தரவின் காரணமாக அவருடன் ஒரு வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். ஒன்றாக மருத்துவ படிப்பை படித்த பாரதியை ஒருதலையாக காதல் கொள்ளும் வெண்பா, அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பல திட்டங்களை தீட்டி வருகிறார்.

தற்போது வெண்பாவை பற்றி சற்று உண்மையை தெரிந்து கொண்ட பாரதி அவரை விட்டு விலகியுள்ள நிலையில், கண்ணம்மா நல்லவளா என்பதை தெரிந்து கொள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து வருகிறார். கோவிலில் இருவரும் தனித்தனியாக பொங்கல் வைக்கின்றனர். இதில் யார் பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர்களது பக்கம் சரியான நியாயம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் கண்ணம்மாவின் பொங்கல் முதலில் பொங்கிவிட்டது. இதனால் பாரதி, தனது மனைவி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழந்துள்ளது.

பாரதிக்கும், கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பு நிறத்தில் பிறந்த ஹேமாவை என்ற குழந்தையை கண்ணம்மாவின் மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். மற்றொரு  குழந்தை கண்ணம்மாவிடம் வளர்கிறது.

ஹேமா தன் மகள் என்று தெரியாமலேயே அவள் மீது உயிராக இருக்கிறான் பாரதி. ஹேமா, தனது பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தான் தனது அம்மா எனத் தெரியாமலேயே பாசமாக அன்பாக இருக்கிறாள். கண்ணம்மாவின் குழந்தை தான் லட்சுமி என்ற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது. ஹேமா பற்றி உண்மை தெரியவில்லை. உண்மைகள் எல்லாம் வெளிவரும் தருணத்தில் இருப்பதால் பாரதி கண்ணம்மா முடிவதாகவும் தகவல்கள் பரவுகின்றன

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Embed widget