மேலும் அறிய

விஜய் டிவி மணிமேகலை ஒரு எபிசோட்டிற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்!

திருமணத்திற்குப்பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டதால் இவருக்குத் தொகுப்பாளினியாக பணிபுரியும் வாய்ப்பு அமையாமல் தவித்துவந்தார் மணிமேகலை.

விஜய் டிவியின் ஆங்கர் மணிமேகலை ஒரு எபிசோடிற்கு ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்கி வருவதாக வெளிவரக்கூடிய தகவல் ரசிகர்களிடம் வைரலாகிவருகிறது.

எந்தவொரு சேனலிலும் புதிய நிகழ்ச்சிகள் தொடங்கினால் அதனை வெற்றிப்பெற செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர்கள் நம்ம ஆங்கர்ஸ் தான். மொக்கையான நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரபலமான ஆங்கர்ஸ்கள் வந்தால் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ஆங்கர்ஸ்களுக்காகவே புதிய புதிய நிகழ்ச்சிகள் எல்லாம் பல சேனல்கள் ஆரம்பிக்கத்தொடங்கிவிட்டனர். அதிலும் தற்போது சிறியவர்கள் முதல் பெரிய குழந்தைகள் வரை அனைவரையும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தன் வசமாக்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி என்று தான் கூற வேண்டும். பல நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்  இருந்தாலும் இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது  தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான மணிமேகலையின் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களைத்தான்.

  • விஜய் டிவி மணிமேகலை ஒரு எபிசோட்டிற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்!

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியில் சேர்ந்த இவர் கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இவரின் நகைச்சுவை பேச்சு மற்றும் எப்போதும் கலகலப்பாக இருக்கும் இவருக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். இப்படி ஆங்கராகப்பிரபலமான இவர் தான் காதலித்த ஹுசைனை வீட்டார்கள் எதிர்ப்புடன் திருமணம் செய்துக்கொண்டதால் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த வேதனையில் இருந்தனர். இவர் திருமணத்திற்குப்பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டதால் இவருக்குத் தொகுப்பாளினியாக பணிபுரியும் வாய்ப்பு அமையாமல் தவித்துவந்தார். இந்நிலையில் தான் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2  நிகழ்ச்சியில் கோமாளியாக அனைத்து மக்களிடமும் மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கூட, தன்னை எப்போது ஆங்கராக ஆக்குவீர்கள் என்று புலம்பிக்கொண்டே இருந்தமையை நாம் பார்த்திருப்போம்.  இந்நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான மணிமேகலைக்கு விஜய் டிவியில் அடுத்தடுத்து ஆங்கரிங் வாய்ப்பு அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த சூழலில் தான் ஒரு எபிசோடிற்கு மணிமேகலை வாங்கும் சம்பளம் தற்போது தலைப்புச்செய்தியாக மாறியுள்ளது. அதற்குக்காரணம் மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் மூன்று மாத காலத்திற்குள் இரண்டு புத்தம் புதிய கார்களை வாங்கிய பிறகு இது வந்தது. இந்நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு ரூ. 60,000 வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

  • விஜய் டிவி மணிமேகலை ஒரு எபிசோட்டிற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்!

முன்னதாக குக் வித் கோமாளி சீசன் 2, மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சியில் தனது குறும்புத்தனத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் மணிமேகலை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணிமேகலை மற்றும் ஹூசைன் இருவரும் யூடியூப் சேனலை நடத்தி அதன் மூலம் மக்களிடையே பிரபலமாகிவருகின்றனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget