மேலும் அறிய

Jana Nayagan Leak: ஜனநாயகன் லீக்.. சிக்கிய முக்கிய குற்றவாளி.. இவரா படத்தை ரிலீஸ் செய்தது?

ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. முதலில் 5 நிமிட காட்சி என சொல்லப்பட்ட அந்த படம் 3 மணி நேரம் முழுவதுமாக ரிலீசானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

நடிகர் விஜய் நடித்து ஜனநாயகன் படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜயின் ஜனநாயகன் படம்

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் நடிகர் விஜயின் 69வது படமாக உருவானது “ஜனநாயகன்”. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் வெளியான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மமிதா பைஜூ, நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், யோகிபாபு என ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் பட நிறுவனம்

இந்த நிலையில் ஜனநாயகன் படம் 2026ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்னையில் சிக்கியதால் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கேவிஎன் பட நிறுவனம் நேரடியாக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடியது. இருந்தாலும், ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பட வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், விஜய் தேர்தலில் போட்டியிடுவதால் விதிகள் காரணமாக ஜனநாயகன் படம் மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. 

இணையத்தில் வெளியானதால் சர்ச்சை

இப்படியான நிலையில் ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. முதலில் 5 நிமிட காட்சி என சொல்லப்பட்ட அந்த படம் 3 மணி நேரம் முழுவதுமாக ரிலீசானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் ஜனநாயகன் படக்குழுவுக்கு ஆதரவாக இருந்தது. உடனடியாக பட நிறுவனம் தரப்பில் சைபர் கிரைம் போலீஸில் புகாரளிக்கப்பட்டது. 

அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். சமூக வலைத்தளங்கள், டெலிகிராம் செயலி மூலம் படத்தை வெளியிட்டவர்கள் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் உதவி எடிட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் சேர்த்து மேலும் 2 பேர் கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனநாயகன் படம் வெளியான நிலையில் அதில் எடிட்டிங் குறியீடு தொடர்பான காட்சிகள் இருந்ததால் அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget